[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Wed May 21 06:06:07 BST 2008


2008/5/20 Ravishankar <ravishankar.ayyakkannu at gmail.com>:
>
> http://tvsaru.blogspot.com/2008/05/804-2.html
>
> உபுண்டு குழுமத்தில் உள்ளவர்கள அங்கும் அனுப்பி வைத்து விடுங்கள்
>
> --


சாரங்கனின் வலைப்பதிவை சுட்டிக்காட்டியமைக்கு ரவிக்கு நன்றி.

சாரங்கனின் முயற்சிகளுக்கும் கண்டறிதலுக்கட்கும் அவருக்கு நன்றி.

அவ்வலைப்பதிவில் சாரங்கன் சொல்வது :

> Smoothing = Subpixel; Hinting = Medium, தமிழ் எழுத்துகளை நன்றாக காட்டுகின்றது.

 Hinting=Slight என்று எழுதவிருந்ததை Hinting = Medium எனத் தவறுதலாக
எழுதிவிட்டார் எனத் தெரிகிறது. ஏனெனில் அவர் காட்டிய பெறுபேறுகளில் 3
வதான Smoothing = Subpixel; Hinting = Slight அமைப்பில்தானே துல்லியம்
சரியாகவுள்ளது?

எனது CRT க்கும் இம்முறைமையில்  கநோம் மேசைத்தளப் பணிச் சூழலுக்கு
Smoothing = Greyscale,  Hinting = Slight ஆகிய அமைப்புகளுடன் துல்லியப்
பிரச்சினை நீங்குகிறது. (நான் பாவிக்கும் 17" monitor க்கு font DPI = 96
).

கே.டி.ஈ மேசைத்தளப் பணிச் சூழலுக்கு   பின்வரும் திரைக்காட்சியில் போல
Hinting = Slight என அமைக்கவும்:
http://skhome.googlepages.com/configure-antialias-fonts-hardy-kde.png
அது எழுத்துருக்கள் அமைக்கும் உரையாடல் பெட்டகத்தில் "Use anti-aliasing"
என்பதற்கான Configure என்ற பொத்தானை அமுக்கி வரும் "Configue Anti-Alias
Settings" எனபதற்கான உரையாடல் பெட்டகத்தில் செய்யவேண்டியது.

xFce மேசைத்தளப் பணிச் சூழலுக்கு (எனது சுபுண்டு நிறுவலில் செய்துபார்த்த
அனுபவ அடிப்படையில்)  பின்வரும் திரைக்காட்சியில் போல Hinting = Slight
என அமைக்கவும்:
http://skhome.googlepages.com/OnxFce-hinting-slight.png
அது "Xfce Settings Manager" என்பதன் கீழ் "User Interface Preference"
என்பதில் "Font Rendering" என்பதற்குச் செய்ய வேண்டியது.

ஆக மேற்காட்டிய 3 மேசைத்தள சூழல்களிலும் Hinting = Slight
(தமிழாக்கத்தில் Slight="கொஞ்சம்") என்ற அமைப்பு துல்லியமின்னமை வழுவைத்
தீர்க்கிறது.

முன்னர் ஆமாச்சு முன்வைத்த
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001456.html
இலுள்ள ஒரு தீர்வான defoma வின் hints கோப்பினால் ஏற்படக்கூடிய விளைவுகளை
தவிர்க்கும் முறை எனது வன்தட்டு நிறுவலில் வழுவை அகற்றுவதில்லை என்பதை
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001475.html
மடலில் குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு சாரங்கன் முன் வைத்த அமைப்பு எனது வன்தட்டு நிறுவலிலும் வழுவை அகற்றுகிறது.

அதாவது துல்லியப் பிரச்சினையை இவ்வழி நிச்சயமாகத் தீர்க்கிறது.

ஆயினும் வேறு சில பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

மேற்காட்டிய எனது மடலில் நான் கூறியவாறு  கநோம் மேசைத்தளத்தில் ta_IN
locale சூழலில் தோற்றம் (Appearance) அமைக்கும் சாரளத்தில்
எழுத்துருக்களுக்கு விவரங்கள் (Details) என்பதை அமுக்குகையில் வரும் Best
Shapes, Best Contrast, Sub Pixel Rendering போன்றவற்றில் எழுத்துக்கள்
கட்டம் கட்டமாக மட்டும் தென்படுவது.

ta_IN locale பாவிக்கையில் knotify உரையாடல் பெட்டகத்தில் தமிழ்
எழுத்துக்கள் கேள்விக்குறிகளாகத் தென்படுவது.

ta_IN locale சூழலில் kbabel இல் தமிழில் உள்ளிடுபவை வாசிக்க இயலா @
போன்ற குறியீடுகளாக வருவது.

அவறிற்கான திரைக்காட்சிகளை பின்னர் (மாலைக்குப்பின் ) முனவைப்பேன்.

அப் பிரச்சினைகள் எல்லாம் en_US.UTF-8 locale பாவிக்கையில்  ஏற்படுவதில்லை.

kbabel க்கு தமிழ் உள்ளிட நான் kmfl யை scim க்கு பின்முகமாக பயன்
படுத்துகிறேன், GTK_IM_MODULE=xim, QT_IM_MODULE=xim என்ற சூழல்
வேறிகளுடன். kmfl இல் எ-கலப்பை விசைப்பலககைகளைப் பாவிக்கத் தேவையான
மேம்பாட்டு நடவடிக்கைகளில் தற்காங்களில் ஈடுபட்டு வருகிறேன் நண்பர்
முகுந்தராஜின் துணையுடன. தற்போது ஓரிரு சோதனைகள் முடித்தபின் விரைவில்
வரும் வாரங்களில் அவை லினக்சுக்கான எ-கலப்பை என தமிழா.காம் வழியாக
வெளிவரும் என்பதையும் இங்கு தெரிவித்துக்கோள்கிறேன்.

மேற்கூறிய defoma வின் hints கோப்புக்கள் செய்யும் அமைப்புக்களில்
குறிப்பிடப்படும்  "hints" என்பதும் சரங்கன் முன்வைத்துள்ள   Anti-Alias
Settings இல் உள்ள "hinting" என்பதும் வெவேறு விடயங்கள் என டெபியன்
ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை கண்டிருக்கிறேன். அவ்வாறாயின்
அவைகளின் பங்குகள் என்னென்ன மற்றும் எவ்வாறு வேறானவை போன்ற அடிப்படை
தொழில்நுட்பத் தகவல்களை நாம் அறிதல் நன்றாகும். வரும் காலங்களில்
வழுக்களை விரைவாக அகற்ற மற்றும் பொருத்தமான வழு அறிக்கைகளை முன்வைக்க
உதவலாம். இவற்றிகான தொழில்நுட்ப அடிப்படைகளை அறிந்தோர் அவற்றை பற்றி எழுத
முனவருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் முன்னேற்றங்களுக்காக வழு அறிக்கை முன்வைக்க வேண்டுமாயின் அதை
நேரடியாக தற்போதைய டெபியன் லெனி (testing) க்கான வழு அறிக்கை சேவைக்கே
முன்வைப்பது பயன் மிகுந்தது. அங்கிருந்துதான் உபுண்டுவிற்கு வருகிறது
எல்லாம், முக்கியமாக defoma விற்கான கோப்புக்களும் மாற்றங்களும்.

சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list