[உபுண்டு_தமிழ்][கருத்துக்கள்] "Re: ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?"

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Tue Feb 20 10:56:11 GMT 2007


On 2/20/07, Sethu <skhome at gmail.com> wrote:
>
> ஆமாச்சு
>
> இத்தகைய கட்டுரைகளை மொழி பெயர்த்து தருகையில் முதலிலேயே மூலம் எவ்
> விடத்தில் (URL) உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதே சரி என்பது என்
> கருத்து.


ஆமோதிக்கின்றேன். கட்டுரை சற்று பெரிதாக இருந்த படியால் கடைசியாக தரலாம்
என நினைத்திருந்தேன். மேலும் அத்துனைப் பெரியக் கட்டுரையை ஒரே மடலில்
குறிப்பிட வேண்டாம் என்கிற எண்ணமும் இருந்தது.

இவை குனு இணைய தளத்தில் உள்ள கட்டுரைகள். குனு இணைய தள
மொழிபெயர்ப்பாளர்களுக்கு ரிச்சர்ட் ஸ்டால் மேன் இந்த கட்டுரைக்கு முன்னுரிமைக்
கொடுத்து மொழி பெயர்ப்பு செய்யுமாறு சில வாரங்களுக்கு முன் கோரியிருந்தார்.

மூலம்: http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.html
இதன் உபுண்டு தமிழ் குழும விகி பக்கம்:
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/
திறந்த_மென்பொருட்கள்_ஏன்_கட்டற்ற_மென்பொருட்களாகா!

|FOSS அல்லது FLOSS என்பதில் உள்ள Free என்பதற்கு "கட்டற்ற" என்பதும்

> நேரடியாக ஆக்கப்பட்ட சொல் அல்லவே? ஏதாவொரு நேரடிச் சொல்லாக்கம் உள்ளதா?


இது தாங்கள் மேற்கோள் காட்டிய படி, நொய்வுடையதே. சுதந்திர மென்பொருட்கள் என்று
சென்னையில் பொதுவாக இதனை குறிப்பது வழக்கம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070220/96cee75a/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list