[உபுண்டு_தமிழ்][கருத்துக்கள்] "Re: ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?"

Sethu skhome at gmail.com
Tue Feb 20 09:50:35 GMT 2007


ஆமாச்சு

இத்தகைய கட்டுரைகளை மொழி பெயர்த்து தருகையில் முதலிலேயே மூலம் எவ்
விடத்தில் (URL) உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதே சரி என்பது என்
கருத்து.

இது போல கணினித்துறை கட்டுரைகளின் தமிழ் மொழிப் பெயர்ப்புக்களை ஒரு
விக்கி (அல்லது விக்கி-டொகு?) ஆக ஆர்வலர்கள் பங்குகளுடன் ஏற்படுத்தினால்
வருங்கால தமிழ் பயனர்களுக்கு மிக உதவியாக இருக்கும். யுனிக்ஸ், லினக்ஸ்
இயங்கு தளங்களின் ஆரம்பகால வரலாறுகள பற்றிய கட்டுரைகள்,   லைனஸ்
தோர்வால்ட் லினக்ஸ் தொடங்குகையில் அவர் எழுதிய சில மின்னஞ்சல்கள்,
அவருக்கும் பேராசிரியர் தானன்பாவுமிறகும் இடையே ஏற்பட்ட கருத்து
மோதல்களுடனான  மின்னஞ்சல் பரிமாற்றங்கள் போன்ற கணினித்துறையின்
வராலாற்றில் முக்கியமான  ஆவணங்கள்  இணையத்தளங்களில் சில தடவைகள்
கண்டிருக்கிறேன்.  அவ்வாறான ஆவணங்களை எல்லாம் தமிழிற்கு மொழி பெயர்த்தல்
நன்றே.

நாம் யாவரும் பாவிக்கும் " கட்டற்ற " என்ற பதத்தினைப் பற்றி யாவரிடமும்
ஒரு வினா. சமீபத்தில் விக்சனரி மடலாற்ற குழுமத்தில் ரவிசங்கர் சுட்டிக்
காட்டிய இராம கி. அவர்களின் வளவு வலைபதிவில் உள்ள ஒரு பதிவினுள் இருந்து
ஒரு பகுதி :

 //
> ஒன்பதாய் வந்த prime number என்ற சொல்லிற்கு, பகா எண், வகுபடா எண் என்று சொல்லியிருந்தார்கள். ஆங்கிலத்தில் பொதிவான (positive) முறையில் பெயரிடும் போது, நாம் சுற்றி வளைத்து நொய்வில்லாதது (non-negative) என்று பெயரிடுவது சரியில்லை. காட்டாக free என்பதை நேரடியாகத் தமிழில் சொல்லுவதற்கு மாறாகச் சிலர் தளையுறாத, கட்டுறாத என்று மொழிபெயர்ப்பார்கள். இது போன்ற மொழியாக்கத்தால், அறிவியல் தமிழ் முன்னேற முடியாது என்பது என் புரிதல். எந்தவொரு ஆங்கிலச் சொல்லிற்கும் நேரடியாகச் சொல்லாக்குவதே நாள்பட நிலைக்கும்.

> பின் prime என்பதை எப்படிச் சொல்லுவது? அதன் பொருள் முன்னே நிற்பது; அடிப்படையானது. தமிழில் பெருமிக் கிடப்பது என்பது முன்வந்து இருப்பதே! பெருவுடையார் = prahadeeswarar; பெருகதம் = pragatham; பெருவாரம் = prahaaram; பெருமானர் என்பவர் முன்னே இருப்பதாக அந்தக்காலக் குமுகாயத்தில் குறிக்கப் பட்டவர் (இந்தக் காலத்தில், இது போன்ற புரிதல் முற்றிலும் மாறி விட்டது. இருந்தாலும் வரலாற்றுக் காரணமாய், பெருமானர் என்ற சொல் அதே போலப் புழங்குகிறது.) இந்தச் சொற்களின் வழியில் prime number = பெருமெண். இந்தச் சொற்களுக்கு எல்லாம் அடிப்படை வினைச்சொல் = பெருவுதல் = முன்வருதல்.
>
//
பார்க்க: http://valavu.blogspot.com/2007/01/blog-post_117008110441154169.html

 FOSS அல்லது FLOSS என்பதில் உள்ள Free என்பதற்கு "கட்டற்ற" என்பதும்
நேரடியாக ஆக்கப்பட்ட சொல் அல்லவே?  ஏதாவொரு நேரடிச் சொல்லாக்கம் உள்ளதா?

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list