[உபுண்டு_தமிழ்]ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Tue Feb 20 03:00:29 GMT 2007


கட்டற்ற மென்பொருக்கும் திறந்த மூல மென்பொருளுக்குமிடையே உள்ள பொதுவான
குழப்பங்கள்


"பிஃரீ சாப்ட்வேர்" என வழங்கும் போது தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடிய
பிரச்சனை எழுகின்றது. "நமக்கு கிடைக்கும் மென்பொருள் இலவசமானது" என உண்மையாக
நோக்கத்திற்கு புறம்பாக அர்த்தம் கொள்ளப் படுகிறது. இதே பதம் "பயனர்களுக்கு சில
சுதந்திரத்தினை வழங்க வல்லது" என்னும் உண்மை நோக்கத்தினையும் பிரதிபலிக்கிறது.
இக்குழப்பத்தினை தவிர்க்க "இது பேச்சுரிமை எனும் போது கிடைக்கக் கூடிய
சுதந்திரத்தினை போன்றது; இலவச பீர் என்று சொல்லும் போது கிடைக்கக் கூடிய
பொருளில் அல்ல" என்ற விளக்கத்துடன் நாமிதனைப் பிரசுரிக்கின்றோம். இது நிரந்திர
தீர்வாகாது. இதனால் முழுமையாக இப்பிரச்சனையைக் களைய இயலாது. வேறு  பொருளினை
ஏற்காத தெளிவான சரியான பதமொன்றே இதற்கு சரியான தீர்வு.

துரதிருஷ்டவசமாக ஆங்கிலத்தில் இதற்கு மாற்றாக நாம் அலசிய பதங்கள் அததற்குரிய
குறைபாடுகளுடன் விளங்கின. இந்த பதம் இதற்கு கச்சிதமாய்  பொருந்தும் எனும்
அளவிற்கு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளும் திருப்தியாக இல்லை.
"திறந்த மூல" மென்பொருட்கள் என்கிற பரிந்துரை உட்பட "கட்டற்ற மென்பொருளுக்காக"
பரிந்துரைக்கப் பட்ட சொற்களனைத்தும் உண்மைப் பொருளோடு இசையவில்லை.


திறந்த மென்பொருளின் அதிகாரப் பூர்வ விளக்கமானது (இவ்விடத்தில் சுட்ட இயலாத
அளவிற்கு அது நீண்டு இருக்கிறது) நமது கட்டற்ற மென்பொருளின் அடிப்படையில்
தருவிக்கப்பட்டது.  அது வேறானது. சில விஷயங்களில் இலகுவாகிற காரணத்தினால், எந்த
உரிமங்களை பயனரைக் கட்டுப்படுத்துகிற காரணத்தினால் ஏற்றுக் கொள்ள இயலாததாக நாம்
கருதுகிறோமோ, அத்தகைய உரிமங்களை திறந்த முல ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் நடைமுறையில் அது நமது விளக்கத்துடன் மிகவும் நெருங்கி நிற்கிறது.


இருந்தாலும், மூல நிரல்களைப் பார்வையிட முடியும் என்பதே திறந்த மூல
மென்பொருட்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கமாக விளங்குகிறது. பெரும்பான்மை
மக்களும் இதையே அதன் பொருளாகக் கருதுகின்றனர். இது கட்டற்ற
மென்பொருட்களின்விளக்கத்தினைக் காட்டிலும் மிகவும் வலுகுறைந்த விளக்கமாகும்.
ஏன் திறந்த மூல மென்பொருள்களின் விளக்கத்தோடு ஒப்பிடுகையிலும் இது வலுகுறைந்த
விளக்கமே.  இவை  கட்டற்ற மென்பொருட்களிலும் சாராத திறந்த மூல மென்பொருட்களிலும்
சாராத பல பென்பொருட்களை உள்ளடக்கியது.

தொடரும்...

அன்புடன்,
ஆமாச்சு.


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070220/65f5fe24/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list