[உபுண்டு பயனர்]குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

DEV RAJ rdev97 at gmail.com
Sat Dec 5 06:28:33 GMT 2009


ராம்தாஸ் அவர்களே,
இதை மின் தமிழில் வெளியிடலாமா?

தேவ்
2009/12/5 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>

> நாம் விரும்பிப் பயன்படுத்தும் இயங்கு தளங்களாக கட்டற்ற இயங்கு தளங்கள் திகழத்
> தொடங்கி விட்டன. பெடோரா, டெபியன், ரெட்ஹாட், பாஸ், ஜென்டூ, உபுண்டு என இவை பல
> வடிவங்களில் கிடைத்து நாம் விரும்பியதை தேர்வு செய்து
> பயன்படுத்தும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன. இவை என்னுடயை மொழியில்
> கிடைக்க வேண்டும் என்பது தாய்மொழிப்பற்றுடைய எவரும் கொள்ளக் கூடிய
> விருப்பமாகும்.
>
> இதனையே நோக்கமாகக் கருதி பல்வேறு மொழிப்பெயர்ப்பு குழுக்களும் பணியாற்றி
> வருகின்றன. அவற்றின் மூலம் பங்களிப்போருக்கும் புதிதாய் மொழிப்பெயர்க்க
> வருவோருக்கும் அடிக்கடி எழும் கேள்வி ஒரு சொல்லுக்கு நிகரானத் தமிழ்ச் சொல்
> என்ன என்பதே. ஒரே பொருளைக் கொண்ட பலச் சொற்கள் இருக்கலாம் என்ற போதும் அவை ஒரே
> பணிச் சூழலில் வெவ்வேறு பகுதிகளில் பிரதிபலிப்பது இயங்குதளத்தை
> பயன்படுத்துவோருக்கு அனாவசியச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
>
> இவற்றை போக்கும் ஒரு முயற்சியாக பெடோரா சமூகம், நாம் குனு லினக்ஸ் பணிச்
> சூழல்களை அன்றாடம் பயன்படுத்துகிற போது அதிகம் காண நேரிடும் சொற்களையும்
> சொற்றொடர்களையும் தொகுத்து அவற்றுக்கு நிகரான பிறமொழிச் சொல்லாக்க
> முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை பெடோரா குழுமத்திற்கே அன்றி அனைத்து
> கட்டற்ற மென்பொருள்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் பயனளிக்கக் கூடியவை.
> இத்திட்டத்தை பெடோரா குழுமத்தார் Frequently Used Entries For
> Localisation (FUEL)[1] என்று அழைக்கிறார்கள்.
>
> இப்பதங்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் கோரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம்
> பன்னிரெண்டாம் தேதியும் பதிமூன்றாம் தேதியும் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC
> அலுவல வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில்
> நேரடியாக கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை அளிக்க விருப்பமுடையோர் எமது
> amachu at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு
> செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  நேரடியாக கலந்து கொள்ள
> இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி
> நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
>
> அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் IRC மூலம் கலந்து கொள்ளலாம்.
> irc.freenode.net வழங்கியின் #fedora-tamil அரங்கின் மூலம் தங்களது
> பரிந்துரைகளை வழங்கலாம். இந்நிகழச்சியின் ஏற்பாட்டுக்
> காரியங்களிலும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் எம்மை
> தொடர்பு கொள்ளவும். இரண்டு நாட்களிலும் அமர்வுகள் காலை பத்து மணிக்குத் தொடங்கி
> மாலை ஐந்து மணி வரை நடைபெறும். பரிந்துரைகள் வேண்டப்படும்
> சொற்கள் http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.odsகோப்பில் கிடைக்கப் பெறுகின்றன.
>
> -----------  நிகழ்ச்சி நிரல்  -----------------
> நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும்
> பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம்
>
> தேதி: 12/12/2009 & 13/12/2009
>
> இடம்:  1) CDAC சென்னை, தரமணி
>      2) #fedora-tamil at irc.freenode.net
>
> நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை
> -----------------------------
>
> [1] - https://fedorahosted.org/fuel/ &
> https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil
>
> --
>
> ஆமாச்சு
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091205/b975fd09/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list