[உபுண்டு தமிழகம்]உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் - நெட்வொர்க் மானேஜர் வழுவும் தற்காலிகத் தீர்வும்...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Nov 26 10:15:26 GMT 2008


உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸில் பிணையத்தினை (Network) பராமரித்திட வேண்டி
Network Manager என்றொரு பயன்பாடு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

தாங்கள் DHCP முறை கொண்டு இணைய வசதி செய்து கொள்பவர் என்றால் எவ்வித
சிக்கலும் இராது. ஆனால் நிலையான அடையெண் (Static IP) கொடுக்கும்
முறைகொண்டு இணையத்தில் இணைவீர்கள் என்றால் கணினியை மீண்டும் தொடங்குகிற
போது Network Manager தங்களது Static IP அமைப்பினை பாழடித்துவிடுகிறது.
மீண்டும் DHCP ஆக பாவிக்கிறது.

இதனை தவிர்த்து Static IP முறைகொண்டு இணையத்தில் இணையும் வாய்ப்பு
பெற்றிருப்போர் கைமுறையாக கீழ்காணும் மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள்.

1) பிரச்சனைக்கு காரணமாக இருக்கும், புதிதாக இன்டிரிபிட்டில்
சேர்க்கப்பட்டிருக்கும் Network Manager தனை நீக்கவும். அதற்கு
முனையத்தினைத் துவக்கி கீழ்காணும் ஆணையிடவும்,

$ sudo apt-get remove network-manager

2) தொடர்ந்து தங்கள் கணினிக்கு தாங்கள் இட விரும்பும் அடையெண்ணைத் தர,

$ sudo gedit /etc/network/interfaces

gedit கொண்டு துவக்கப்படும் கோப்பில் தங்கள் கணினிக்கான பிணையத் தகவல்களை
கீழ்காணும் நெறிக்கு இணங்கி தரவும்.

iface eth0 inet static
address 192.168.0.125
netmask 255.255.255.0
gateway 192.168.0.1

கோப்பினைக் காத்து மூடவும்.

3) பின்னர் /etc/resolv.conf கோப்பில் DNS முகவரியினை அளித்திட வேண்டும். அதற்கு,

$ sudo gedit /etc/resolv.conf

திறக்கப்படும் கோப்பில் கீழ்காணும் நெறிப்படி IP முகவரி இடவும்.

nameserver <ip-address>

உதாரணம்:

nameserver 203.145.184.13

4) பின்னர் முனையத்தில்,

$ sudo /etc/init.d/networking restart

தங்களால் தற்போது இணையத்தில் பணிகளை மேற்கொள்ள இயலவேண்டும். சோதிக்க,

$ ping ubuntu-tam.org

தளம் பதில் அளிக்காவிட்டால் கணினியை ஒரு முறை மீளத் துவங்கவும்.

மீளத் துவக்கியதும் தங்களது பிணைய அமைப்பும் மாறாது இருப்பதை உறுதி
செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து சிக்கல்கள் இருப்பின் இங்கே
தெரியப்படுத்தவும்.

இவ்வழுவை திருப்பூரில் நடைபெற்ற உபுண்டு வெளியீட்டு நிகழ்ச்சியில்
சுட்டிக் காட்டிய செந்திலுக்கு நன்றி.

இம்முறை தற்காலிகத் தீர்வே!

--
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list