[உபுண்டு தமிழகம்]உபுண்டு திருப்பூரிலிருந்து...

Babu K babu at apexinfo.co.in
Mon Nov 24 02:42:02 GMT 2008


திரு ஆமாச்சு அவர்களுக்கும், ஏனைய பிற குழு பங்களிப்பாலர்களுக்கும்
திருப்பூர் ஐ.டீ அசோசியேஷன் சார்பாக வணக்கங்கள்.

நேற்று முன்தினமும் நேற்றும் நடைபெற்ற உபுண்டு பயிற்சி சிறப்பாக
நடைபெற்றது. திரு ஸ்ரீ ராமதாஸ் மற்றும் திரு சிவா (கம்பன் பொறியியல்
கல்லூரி மாணவர்)
 ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு பயிற்சியும்
அவர்களின் சந்தேகங்களுக்கு சிறப்பான தீர்வுகளையும் வழங்கினர்.

திரு ஸ்ரீ ராமதாஸ் மற்றும் திரு சிவா (கம்பன் பொறியியல் கல்லூரி மாணவர்)
ஆகியோருக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உதவிய திருப்பூர் ஐ.டீ
அசோசியேஷன் தலைவர் திரு.இரவிசந்திரன் அவர்களுக்கும், உறுப்பினர்கள்
திரு.செந்தில் குமார் மற்றும் திரு.தியாகராஜ் அவர்களுக்கும் என் நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்ஙனம்,

கி.பாபு
செயலாளர்,
திருப்பூர் ஐ.டீ அசோசியேஷன்
கை பேசி : 97900-12312 / 9345-201-301


More information about the Ubuntu-tam mailing list