[உபுண்டு தமிழகம்]யாவர்க்குமான மென்பொருள் இயக்கம்/ அறக்கட்டளை
ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
amachu at ubuntu.com
Fri Dec 12 02:26:03 GMT 2008
வணக்கம்,
உபுண்டு தமிழ் குழுமம் உள்ளிட்ட கட்டற்ற மென்பொருள் தொடர்பான செயல்கள்
தரும் உற்சாகத்தினைத் தொடர்ந்து தமிழகத்தில் இம்முயற்சிகளுக்கு பொதுவான
செயல் வடிவம் கொடுக்கவும், http://kanimozhi.org.in/kanimozhi/?p=224
பக்கத்தில் உள்ளவற்றை மேற்கொள்ள வேண்டி வளங்கள் வசதிகள் திரட்டிட
வேண்டியும், தகவல் தொழில்நுட்பத்தினைப் பொறுத்த வரை கட்டற்ற மென்பொருள்
கொள்கையை தழுவியதாக அரசின் நிலைப்பாடு அமைய காரியங்கள் மேற்கொள்ளவும்
'யாவர்க்குமான மென்பொருள் இயக்கம்/ அறக்கட்டளை' அமைக்கும் பணிகளை
மேற்கொண்டுள்ளோம். கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் கொள்கைகளால்
உந்தப்பட்ட அதே சமயம் நமது தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப
செயல்படும் இயக்கமாக இது அமையும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புக்கள் கலந்துரையாடல்களின்
விளைவாய் இவ்வியக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இவ்வியத்தின்
முதற் படைப்பாய் 'கட்டற்ற மென்பொருள்' புத்தகத்தினை
காணிக்கையாக்குகிறோம். இம்முயற்சிக்கு தொடக்கம் முதலே உற்ற துணையாய்
நிற்கும் ஸ்ரீநிவாஸன், அருண், பாரதி ஆகியோருக்கு நன்றி. இது குறித்த
ஆரம்ப கட்ட விவாதங்களுக்கும் செயல்களுக்கும் அடித்தளம் அமைத்துத் தந்த
என் ஆர் சி பாஸ் அமைப்பிற்கு நன்றி.
இம்முயற்சி வெற்றிபெற உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வாழ்த்துக்களையும்
வேண்டுகிறோம்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-tam
mailing list