[உபுண்டு தமிழகம்]Template - இணையானத் தமிழ்ச் சொல் வேண்டும்
ம. ஸ்ரீ
ம. ஸ்ரீ
Sun Jan 21 02:54:37 GMT 2007
On Sun, 2007-01-21 at 07:31 +0530, ramkumar lakshminarayanan wrote:
> I am ramkumar, freelancer for the magazine Tamil Computer, Did you
> talked to the college students about the translation of Tamil.
இது வரை இதற்கான முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை.
> Most of the readers are not interested in the tamil work because of
> trying to convert the computer terminology in tamil. (Most of the
> students who are studying computers are mainly to get jobs abroad -
> this is the fact everyone know.)
பெரும்பாலும் இக்கருத்தினை ஏற்கிறேன். சென்னை வந்த எனக்கு பல நேரங்களில்
காணக் கிடைத்த அனுபவம் ஒன்றுண்டு. நாகரிகத் (?) தாயும் சேயும் பேசிக்
கொள்ளும் மொழி ஆங்கிலம் :-(
கல்லூரி நாட்களில், என்னிடம் மேடை ஏறும் வரை சாதாரணமாக தமிழில் பேசும்
எமது ஆசிரியர் ஏன் மேடை ஏறியதும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என பல முறை
சிந்தித்துண்டு.
ஏன் ஆங்கிலம் கற்கிறோம் என்பதை உணராததால் விளையும் கேடு இது. தமிழுக்கு
மாற்றாக இல்லை மாறாக தமிழ் தெரியாத பிற சமூகத்தாருடன் பழகும் போது பயன்
தரும் என்பதற்காக மட்டுமே! ஹிந்தியும் அப்படியே!
சமஸ்கிருதம் பொதுவான மொழியாக இருந்த காலத்தில் கூட நமது மூதாதையர்கள் அதனை
இணையான மொழியாகக் கற்றனரே தவிர தமிழுக்கு மாற்றாக இல்லை. சமஸ்கிருதம்
அறித்த ஒருவர் தமிழிலும் நிச்சயம் புலமை வாய்ந்தவராக இருப்பார்.
இன்று ஆங்கிலம் தமிழுக்கு மாற்றாக கற்பிக்கப் படுகிறது. தனித் தமிழ்
இயக்கத்தினை தலைமை ஏற்று நடத்திய மறைமலை அடிகள் உட்பட.
ஆனால் இன்று ஆங்கிலம் தெரிந்த ஒரு வாலிபருக்கு தமிழ் எழுதப் படிக்கத்
தெரியுமா என்பதே சந்தேகமே!
தாய் மொழித் எழுதப் படிக்க தெரியாதவர்களை கற்றவர்கள் பட்டியலில்
காணமுடிகிறது..
ராஜா வீட்டில் தங்கக் கூண்டிலிருக்கும் கிளிக்கும் சிறகடித்துப் பறக்கும்
சாதாரண பச்சைக் கிளிக்கும் உள்ள வித்தியாசம்.. ;-)
தாங்கள் சொல்வது போல் ராஜா வீட்டில் தங்கக் கூண்டிலிருப்பதையே பலரும்
விரும்புகிறார்கள்.
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்!!
நானும் கூட துவக்கத்தில் அப்படி தான் நினைத்தேன். பழகிப் பழகிப் பரிசயம்
ஆகிவிடத் துவங்கியுள்ள நிலையில் இப்போது இது விகாரமாய் தெரியவில்லை.
ஆனால் தமிழாக்கம் செய்யும் அளவிற்கு அதனை புழக்கத்தில் விட எவரும்
முனைப்பினைக் காட்டுவது இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
ரொம்ப விட்டுக்கொடுக்கத் துவங்கியதுு (compromise) தான் இதற்குக் காரணம்.
இப்போது எமது கட்டுரைகள், நாம் துவங்கியுள்ள "ஸ்ரீ வித்யா குனுகுலம்"
த்தில்
"http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/தமிழ்_க்னூ_லினக்ஸ்_வகுப்புகள்" மாணாக்கருக்கு கணினி கல்வி எல்லாமே தமிழ் வழியில் இருப்பதால் இது பழக்கமாகி வருகிறது.
> We have to create the understandability of Ubuntu using Tamil. At
> the initial version, we can try to make the words as simple as
> possible.
பெரும்பாலும் இது வரை எமது முயற்சி ஆங்கிலம் தெரிந்தவர்களுக்காக இல்லை.
அவர்களுக்கு ஆயிரம் வழி இருக்கிறது. ஆங்கிலம் அறியாதவர்களுக்காகவே
இம்முயற்சி. ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்கள் செய்ய வேண்டிய முயற்சி.
அவர்களுக்கு ஆங்கில தொழில் நுட்பச் சொல்லே தெரியாதாகையால் அவர்களிடன்
தமிழ் சொற்களை எடுத்து புழக்கத்தில் விடுவது சுலபம்.
நாம் வார்த்தைகளை எளிமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்கிறேன்.
> Regarding the discussion in Template why don't we put template in
> tamil. if possible put the tamil version within a parenthesis, or by
> means by means of tip. For example computer is the common term every
> lay man knows, in the intial version we can use the work (fk;g;A
> +l;lh;). Share your views. Please see some of my works at
> http://forge.mysql.com/wiki/Tamil
இதனை சற்று மேலும் விளக்கமாக சொல்லுங்களேன். தங்களால் இன்றிரவு IRC
உரையாடலுக்கு வரையலுமா?
> It is a very good effort by this ubuntu team. It is just my idea.
நன்றி.
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam
mailing list