[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed Apr 25 04:08:23 BST 2007


On 4/25/07, Ramanraj K <ramanraj.k at gmail.com> wrote:
> wireless card : கம்பியில்லா  மின்னட்டை
>
> நண்பர் ஒருவர் மடலில் phone என்பதை தொலைபேசி எனவும், mobile என்பதை
> அலைபேசி எனவும் குறித்திருந்தார்.  wireless card என்பதை அலை அட்டை என
> குறிக்கலாமா?


mobile க்கு செல் பேசி ன்னே  சொல்லலாம். முதலில் Cell என்பது ஒரு
குறிப்பிட்டவட்டத்திற்குள் எடுத்துச் சென்று உரையாட வழி செய்தது. roaming
வந்த பின் அது mobile ஆனது.  தமிழில் செல் பேசி எனும் போது செல்லும்
இடத்திற்கு எல்லாம் எடுத்துச் சென்று உரையாட துணைநிற்கும் கருவி எனச்
சொல்லலாம்.

அலை  என்பதை  Waves என்ற பொருளில் பயன்படுத்தினால் அலை  அட்டை  அல்லது
அலைத் தட்டு எனச் சொல்லலாம். Radio waves, electromagnetic waves -
பண்பலை  வானொலி ன்னு எல்லாம் செல்லுகிறார்களே.. அதே போன்றதொரு அர்த்தம்
கொள்ளலாம்...

அட்டை  யா  தட்டா  இல்ல நம்ம சத்யராஜ் ஸ்டைல்ல தகடு ன்னு சொல்லலாமா? :-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-tam mailing list