[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்
Rathan Raja Rajendren
rathan.ram at gmail.com
Tue Apr 24 19:40:40 BST 2007
ஆமாச்சு,
விரிவான தகவலுக்கு நன்றி. இன்றே முயற்சி செய்து பார்க்கிறேன்.
ரத்தன்.
http://rathan.wordpress.com
====================
Stay Hungry ! Stay Foolish !
On 4/24/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> On 4/24/07, Rathan Raja Rajendren <rathan.ram at gmail.com> wrote:
> >
> > உபுண்டு குழுவினர்களுக்கு,
> >
> > நான் சென்ற வாரம் உபுண்டு இயங்குதளத்தை எனது மடிக்கணினியில்
> > (laptop) நிறுவினேன். எனது மடிக்கணினியில் வயர்லெஸ் வசதி உண்டு. இதன் மூலம்
> > எப்படி இணையத்தள இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை.
> >
> >
>
> முதல்ல இங்கேயே கேளுங்க ரத்தன்..தமிழ்ல.. அடுத்து உபுண்டு தமிழ் ஃபாரம்.
> thamizh.ubuntuforums.org கடைசியா மத்த வழிங்க... ;-) சரி உபுண்டு கையேட்டை
> தமிழாக்கம் செஞ்சதுல கிடைச்சது...
>
> கம்பியில்லா மின்னட்டைகள்: (Wireless Cards)
>
> பெரும்பாலான கம்பியில்லா மின்னட்டைகள் உபுண்டு நிறுவும் போதே இனங்காணப்
> படுகின்றன. தங்களின் மின்னட்டைக்கிருக்கும் ஆதவரவைப் பற்றியறிய System →
> Administration → Networking துவக்கவும். தங்களின் கம்பியில்லா மின்னட்டை
> பட்டியலில் காணப்பட்டால்
>
> 1) System → Administration → Networking துவக்கவும்.
> 2) எவ்வகை இணைப்பினைத் தாங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதனைத் தேர்வு
> செய்யவும்.
> 3) இவ்விணைப்பானது செயல்படுத்தப் பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
> 4) தங்களுக்கு இணைய சேவையினை வழங்கும் நிறுவனமோ தங்களின் பிணைய நிர்வாகியோ
> தங்களுக்கென IP முகவரியொன்றினை வழங்க்யிருந்தால் வடிவமைப்பினை மாறா IP
> முகவரிக்கு மாற்றி, IP க்குரிய தளத்தில் அம்முகவரியினை உள்ளிடவும். இலகையெனில்
> வடிவமைப்பினை DHCP ஆகத் தேர்வு செய்யவும்.
> 5) தங்களுடைய பிணைய இணைப்பினை செயற்படுத்த அல்லது செயலிழக்கச் செய்ய தங்களின்
> இணைபினைத் தேர்வு செய்து தேவைக் கேற்றாற் போல் Activate/Deactivate பொத்தானைச்
> சொடுக்குங்கள்.
>
> மேலே கூறியுள்ளபடி தாங்கள் இணையத்துடன் இணைய முயற்சிக்கலாம்.
>
> உபுண்டுவினால் ஏற்கப் படும் கம்பியில்லா மின்னட்டைகளின் பட்டியல் [https://help.ubuntu.com/community/WifiDocs/WirelessCardsSupported]
> பக்கத்தில் கிடைக்கப் பெறுகின்றது. தாங்கள் பயன்படுத்தும் மின்னட்டை
> உபுண்டுவில் வெற்றிகரமாகச் செயல்பட்டால் இப்பட்டியலில் அதன் விவரத்தினையும்
> இணைக்கவும்.
>
> சில மின்னட்டைகள் இயல்பாகவே உபுண்டுவோடு பணிபுரியாது. இங்ஙனம் தொல்லை
> இருக்குமாயின் கம்பியில்லா பிர்ச்சனைக்குத் தீர்வு பக்கத்தின் https://wiki.ubuntu.com/WirelessTroubleshootingGuide
> உதவியினை நாடவும்.
>
> ஒரு வேளை தங்களின் கம்பியில்லா மின்னட்டை உபுண்டுவில் பணிபுரியாது போகிற
> பட்சத்தில் தாங்கள் சற்று ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டியிருக்கும். ndiswrapper
> கருவியினைப் பயன்படுத்தி தங்களின் மின்னட்டயினை சோதித்து செயல்படுத்தலாம். இக்
> கருவியானது விண்டோசுக்கான இயக்கியை (driver) உபுண்டுவில் பயன்படுத்தி
> கம்பியில்லா மின்னட்டையை பயன்படுத்த ஏதுவாக்குகிறது.
>
> இதனைச் செயல்படுத்த கீழ் காணும் பகுடியில் உள்ள குறிப்புகளை பயன்படுத்தவும்.
>
> விண்டோஸ் கம்பியில்லா இயக்கிகள்
>
> தங்களின் கம்பியில்லா பிணைய அட்டையானது இயல்பாக லினக்ஸ் இயக்கியைனைப் பெறாது
> போனாலும் கூட ndiswrapper ன் துணையினைக் கொண்டு அதனை பயன்படுத்த முடியும்.
> பெரும்பாலான சந்தர்பபங்களில் ndiswrapper எனும் இந்த லினக்ஸ் மாட்யூலினைக்
> கொண்டு உபுண்டுவில் கம்பியில்லா மின்னட்டைகளை செயல்படுத்த இயலும்.
>
> இக்குறிப்புகள் x86 மற்றும் AMD64 வகை உபுண்டுவுக்கானவை. PowerPC
> க்கானது அல்ல.
>
> தங்களிடம் இணைய இணைப்பு இருக்கிற பட்சத்தில்
>
> http://ndiswrapper.sourceforge.net/mediawiki/index.php/Listபக்கத்தின்
> துணையுடன் தங்களுடைய கம்பியில்லா மின்னட்டை ndiswrapper ஆல் ஆதரிக்கப்
> படுகிறதா என்பதை சரிபார்க்கலாம்.
>
> ndidwrapper னை நிறுவ ndiswrapper-utils பொதியினை நிறுவ வேண்டும். இது
> உபுண்டு குறுவட்டோடு கிடைக்கப் பெறுகிறது. இணைய இணைப்பினைப் பெற்றிருந்தால்
> இதற்கான வரைகலை இடைமுகப்பினையும் தாங்கள் நிறுவிக்கொள்ளலாம். அதற்கான செயலி
> ndisgtk. இது Universe களஞ்சியத்தில் கிடைக்கப் பெறுகின்றது.
>
> ndiswrapper னை செயல்படுத்த தங்களுடைய மின்னட்டையின் விண்டோஸ் இயக்கியின
> இருப்பு அவசியம். தங்களின் மின்னட்டையுடன் பெறப் பட்ட குறுவட்டு இதற்கு
> பயன்படும். .SYSமற்றும் .INF என நிறைவுறும் இரண்டு கோப்புகளை தங்கள் கணினியின்
> ஒரு இடத்தில் பிரதியெடுக்கவும். .BIN என்ற விகிதுயுடன் கூடிய கோப்புகள்
> இருக்குமாயின் அவற்றையும் பிரதியெடுக்கவும். ஏற்புடைய கோப்புகளை தேர்வு
> செய்வது இயலாது அல்லது கடினமாகிற பட்சத்தில் ndidwrapper ன் உதவிப் பக்கத்தின்
> http://ndiswrapper.sourceforge.net/mediawiki/index.php/list உதவியினை
> நாடவும்.
>
> தாங்க ndisgtk எனப்படும் வரைகலை இடைமுகப்பினை நிறுவி இருந்தால் System →
> Administration → Windows Wireless Drivers தேர்வு செய்து கொடுக்கப்
> பட்டிருக்கும் குறிப்புகளைக் கடைபிடிக்கவும்.
>
> வரை கலை இடைமுகப்பைனை நிறுவி இராத பட்சத்தில் கீழ்காணும் குறிப்புகளைப்
> பின்பற்றவும்.
>
> 1.முனையத்திலிருந்து,
>
> $ sudo ndiswrapper -i ~/Desktop/drivername.inf எனும் கட்டளையினைக்
> கொடுக்கவும்.
> மேற்கண்ட கட்டளையானது தங்களின் .INF கோப்பின் பெயர் drivername.inf என்ற
> ஊகத்தின் பெயரில் கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் இக்கோப்பானது Desktop னுள்
> இருப்பதாகவும் ஊகிக்கப் பட்டுள்ளது. தேவைக் கேற்ப இவற்றை மாற்றிக் கொள்ளலாம்.
>
> 2. இது சரியாக பணிபுரிகின்றதா என சோதிக்க
>
> $ ndiswrapper -l
> சரியாக பணியாற்றுகிற பட்சத்தில் கீழ்காணும் விவரங்களைத் தங்களால்
> பார்க்க இயல வேண்டும்.
> Installed ndis drivers:
> {name of driver} driver present, hardware present
>
> 3. ndiswrapper செயல்புரிய ஒரு மாட்யூலினை ஏற்ற வேண்டியிருக்கும். இதற்கு
>
> $ sudo depmod -a
> $ sudo modprobe ndiswrapper
> ஆகிய கட்டலைகளைக் கொடுக்கவும்.
>
> 4. இம்மாட்யூல் தாங்கள் ஒவ்வொரு முறை கணினியினை துவக்கும் போது ஏற்றப் பட
> வேண்டுமாயின் முனையத்திலிருந்து,
> $ sudo ndiswrapper -m கட்டளையினைக் கொடுக்கவும்.
>
> மேலே சாய்வெழுத்துப் பகுதியில் கூறியுள்ளபடி தாங்கள் இனி இணையத்தில்
> இணையலாம்...
>
> குறிப்பு: இது உபுண்டு கையேட்டின் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப் பட்டது.
> செயல்படுத்த முயற்சித்து தங்களின் கருத்துக்களை அறியத் தரவும்.
>
> நன்றி.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070424/f48190a4/attachment-0001.htm
More information about the Ubuntu-tam
mailing list