[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue Apr 24 19:20:50 BST 2007


On 4/24/07, Rathan Raja Rajendren <rathan.ram at gmail.com> wrote:
>
> உபுண்டு குழுவினர்களுக்கு,
>
> நான் சென்ற வாரம் உபுண்டு இயங்குதளத்தை எனது மடிக்கணினியில்
> (laptop) நிறுவினேன். எனது மடிக்கணினியில் வயர்லெஸ் வசதி உண்டு. இதன் மூலம்
> எப்படி இணையத்தள இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை.
>
>

முதல்ல இங்கேயே  கேளுங்க ரத்தன்..தமிழ்ல.. அடுத்து  உபுண்டு தமிழ் ஃபாரம்.
thamizh.ubuntuforums.org கடைசியா மத்த வழிங்க... ;-) சரி உபுண்டு கையேட்டை
தமிழாக்கம் செஞ்சதுல கிடைச்சது...

 கம்பியில்லா மின்னட்டைகள்: (Wireless Cards)

பெரும்பாலான கம்பியில்லா  மின்னட்டைகள் உபுண்டு நிறுவும் போதே இனங்காணப்
படுகின்றன. தங்களின் மின்னட்டைக்கிருக்கும் ஆதவரவைப் பற்றியறிய  System →
Administration → Networking துவக்கவும். தங்களின் கம்பியில்லா  மின்னட்டை
பட்டியலில் காணப்பட்டால்

 1)  System → Administration → Networking துவக்கவும்.
2) எவ்வகை  இணைப்பினைத் தாங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதனைத் தேர்வு
செய்யவும்.
3) இவ்விணைப்பானது செயல்படுத்தப் பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
4) தங்களுக்கு இணைய சேவையினை  வழங்கும் நிறுவனமோ  தங்களின் பிணைய நிர்வாகியோ
தங்களுக்கென IP முகவரியொன்றினை  வழங்க்யிருந்தால் வடிவமைப்பினை மாறா IP
முகவரிக்கு மாற்றி, IP க்குரிய தளத்தில் அம்முகவரியினை உள்ளிடவும். இலகையெனில்
வடிவமைப்பினை DHCP ஆகத் தேர்வு செய்யவும்.
5) தங்களுடைய பிணைய இணைப்பினை செயற்படுத்த அல்லது செயலிழக்கச் செய்ய தங்களின்
இணைபினைத் தேர்வு செய்து தேவைக் கேற்றாற் போல்  Activate/Deactivate பொத்தானைச்
சொடுக்குங்கள்.

மேலே கூறியுள்ளபடி தாங்கள் இணையத்துடன் இணைய முயற்சிக்கலாம்.

உபுண்டுவினால் ஏற்கப் படும் கம்பியில்லா  மின்னட்டைகளின் பட்டியல் [
https://help.ubuntu.com/community/WifiDocs/WirelessCardsSupported]
பக்கத்தில் கிடைக்கப் பெறுகின்றது. தாங்கள் பயன்படுத்தும் மின்னட்டை
உபுண்டுவில் வெற்றிகரமாகச் செயல்பட்டால் இப்பட்டியலில் அதன் விவரத்தினையும்
இணைக்கவும்.

சில மின்னட்டைகள் இயல்பாகவே உபுண்டுவோடு பணிபுரியாது.  இங்ஙனம் தொல்லை
இருக்குமாயின் கம்பியில்லா  பிர்ச்சனைக்குத் தீர்வு பக்கத்தின்
https://wiki.ubuntu.com/WirelessTroubleshootingGuide  உதவியினை  நாடவும்.

ஒரு வேளை தங்களின் கம்பியில்லா  மின்னட்டை  உபுண்டுவில் பணிபுரியாது போகிற
பட்சத்தில் தாங்கள் சற்று ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டியிருக்கும். ndiswrapper
கருவியினைப் பயன்படுத்தி தங்களின் மின்னட்டயினை சோதித்து செயல்படுத்தலாம்.  இக்
கருவியானது விண்டோசுக்கான இயக்கியை (driver) உபுண்டுவில் பயன்படுத்தி
கம்பியில்லா மின்னட்டையை  பயன்படுத்த ஏதுவாக்குகிறது.

இதனைச் செயல்படுத்த கீழ் காணும் பகுடியில் உள்ள குறிப்புகளை பயன்படுத்தவும்.

விண்டோஸ் கம்பியில்லா இயக்கிகள்

தங்களின் கம்பியில்லா பிணைய அட்டையானது இயல்பாக லினக்ஸ் இயக்கியைனைப் பெறாது
போனாலும் கூட ndiswrapper ன் துணையினைக் கொண்டு அதனை பயன்படுத்த முடியும்.
பெரும்பாலான சந்தர்பபங்களில் ndiswrapper எனும் இந்த லினக்ஸ் மாட்யூலினைக்
கொண்டு உபுண்டுவில் கம்பியில்லா  மின்னட்டைகளை செயல்படுத்த இயலும்.

    இக்குறிப்புகள்  x86 மற்றும் AMD64 வகை  உபுண்டுவுக்கானவை. PowerPC க்கானது
அல்ல.

தங்களிடம் இணைய இணைப்பு இருக்கிற பட்சத்தில்

 http://ndiswrapper.sourceforge.net/mediawiki/index.php/Listபக்கத்தின்
துணையுடன் தங்களுடைய கம்பியில்லா மின்னட்டை  ndiswrapper ஆல் ஆதரிக்கப்
படுகிறதா  என்பதை  சரிபார்க்கலாம்.

ndidwrapper னை நிறுவ  ndiswrapper-utils பொதியினை  நிறுவ வேண்டும். இது
உபுண்டு குறுவட்டோடு கிடைக்கப் பெறுகிறது.  இணைய இணைப்பினைப் பெற்றிருந்தால்
இதற்கான வரைகலை  இடைமுகப்பினையும் தாங்கள் நிறுவிக்கொள்ளலாம்.  அதற்கான செயலி
ndisgtk.  இது Universe களஞ்சியத்தில் கிடைக்கப் பெறுகின்றது.

ndiswrapper னை செயல்படுத்த தங்களுடைய மின்னட்டையின் விண்டோஸ் இயக்கியின
இருப்பு அவசியம். தங்களின் மின்னட்டையுடன் பெறப் பட்ட குறுவட்டு இதற்கு
பயன்படும். .SYSமற்றும் .INF என நிறைவுறும் இரண்டு கோப்புகளை தங்கள் கணினியின்
ஒரு இடத்தில் பிரதியெடுக்கவும். .BIN என்ற விகிதுயுடன் கூடிய கோப்புகள்
இருக்குமாயின் அவற்றையும் பிரதியெடுக்கவும். ஏற்புடைய கோப்புகளை  தேர்வு
செய்வது இயலாது அல்லது கடினமாகிற பட்சத்தில் ndidwrapper ன் உதவிப் பக்கத்தின்
http://ndiswrapper.sourceforge.net/mediawiki/index.php/list  உதவியினை
நாடவும்.

தாங்க ndisgtk எனப்படும் வரைகலை  இடைமுகப்பினை  நிறுவி இருந்தால்  System →
Administration → Windows Wireless Drivers தேர்வு செய்து கொடுக்கப்
பட்டிருக்கும் குறிப்புகளைக் கடைபிடிக்கவும்.

வரை  கலை  இடைமுகப்பைனை நிறுவி இராத பட்சத்தில் கீழ்காணும் குறிப்புகளைப்
பின்பற்றவும்.

1.முனையத்திலிருந்து,

$ sudo ndiswrapper -i ~/Desktop/drivername.inf  எனும் கட்டளையினைக்
கொடுக்கவும்.
மேற்கண்ட கட்டளையானது தங்களின் .INF கோப்பின் பெயர்  drivername.inf  என்ற
ஊகத்தின் பெயரில் கொடுக்கப் பட்டுள்ளது.  மேலும் இக்கோப்பானது Desktop னுள்
இருப்பதாகவும் ஊகிக்கப் பட்டுள்ளது. தேவைக் கேற்ப இவற்றை  மாற்றிக் கொள்ளலாம்.

2.   இது சரியாக பணிபுரிகின்றதா என சோதிக்க

$ ndiswrapper -l
     சரியாக  பணியாற்றுகிற பட்சத்தில் கீழ்காணும் விவரங்களைத் தங்களால் பார்க்க
இயல வேண்டும்.
     Installed ndis drivers:
     {name of driver}         driver present, hardware present

3.   ndiswrapper செயல்புரிய ஒரு மாட்யூலினை ஏற்ற வேண்டியிருக்கும். இதற்கு

     $ sudo depmod -a
     $ sudo modprobe ndiswrapper
    ஆகிய கட்டலைகளைக் கொடுக்கவும்.

4.   இம்மாட்யூல் தாங்கள் ஒவ்வொரு முறை கணினியினை  துவக்கும் போது ஏற்றப் பட
வேண்டுமாயின் முனையத்திலிருந்து,
     $ sudo ndiswrapper -m கட்டளையினைக் கொடுக்கவும்.

மேலே  சாய்வெழுத்துப் பகுதியில் கூறியுள்ளபடி தாங்கள் இனி இணையத்தில்
இணையலாம்...

குறிப்பு: இது உபுண்டு கையேட்டின் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப் பட்டது.
செயல்படுத்த முயற்சித்து தங்களின் கருத்துக்களை அறியத் தரவும்.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070424/2581cd86/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list