[உபுண்டு தமிழகம்][உபுண்டு_தமிழ்]இன்றைய IRC உரையாடலில்...
ம.ராமதாஸ்
shriramadhas at gmail.com
Sun Dec 24 18:37:13 GMT 2006
உபுண்டு தமிழாக்க குழுவில் திரு சேது அவர்களின் பதிலுரை...
---------- Forwarded message ----------
From: K. Sethu <skhome at gmail.com>
Date: Dec 24, 2006 7:22 PM
Subject: Re: [உபுண்டு_தமிழ்]இன்றைய IRC உரையாடலில்...
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
On 12/24/2006 04:01 PM, ம.ராமதாஸ் wrote:
> வணக்கம்,
>
> இன்றைய IRC உரையாடலில் தமிழக அரசின் Unicode பரிந்துரைகள் பற்றி சிறிது
அலசப்
> பட்டது. இது குறித்து நேரம் ஒதுக்கி ஆராய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
>
> பலரும் கலந்து கொள்ள வேண்டி நமது இந்த IRC உரையாடலை இந்திய நேரம் இரவு 8.00
> மணிக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாமா?
>
சரி - கலந்து கொள்ள நேரம் ஒதுக்கியுள்ளேன். யாரும் திடீர் விருந்தினர்
வராவிடில் கலந்து
கொள்வேன். ஒரு வேளை ஏதாவது காரணத்தினால் கலந்து கொள்ள முடியாமல் போகுமேயானால்,
இதோ
இப்போதைக்கு எனது சில கருத்துக்கள்:
TANE (அதாவது முன்னர் TUNE என அழைக்கப்பட்ட) குறியீடு முறைக்கு யுனிக்கோடின்
BMP (
Basic Multilingual Plane) இல் இடம் அளிக்க Unicode.org யினர் முன்வருவதற்கு
சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் வெற்றிடங்கள் அங்கே
இல்லையாம். இதை
TUNE-RFC யாகூ குழுமத்தில் தீவிர எதிர்ப்பாளர்கள் பல தடவைகள் கூறிவிட்டனர்.
இவ்வருடம்
செப்டெம்பர் தொடக்கத்தில் சென்னையில் இந்திய மத்திய அமைச்சர் தயானிதி மாறன்
தலைமையில்
"புதிய தமிழ் ஒருங்குறி" கருத்தரங்கின் பின்னர் tune-rfc யாகூ மடலாடற் குழுவில்
மிக
உக்கிரமாக பல வாத விவாதங்கள் ஒக்டோபர் இறுதி வரை நடைபெற்றது - அதன் பின்
மடல்கள்
குறைந்து செப்டெம்பர் முன் போல ஏனோ தானோ எனறே உள்ளது.
திரு மாறன் கருத்தொருமித்தலடையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தாராம்
அக்கருத்தரங்கில். (அவர் பாரட்டப்படக்
கூடியவர் - TUNE எதிர்ப்பாளர் வெங்கட்ரங்கனின்
இந்த வலைப்பதிவைப் பாருங்கள், நான் ஏன் அப்படி சொல்லுவதற்கான காரணத்தை -
http://www.venkatarangan.com/blog/default,month,2006-09.aspx ).
ஆனால் ஆதரவாளர்கள் ஒருபகக்ம் (இளங்கோ, செல்லப்பன், இராம்கீ...) எதிர்ப்பாளர்கள்
மறுபக்கம்
(அன்பரசு, நா. கனேசன் ...) இது வரை அவ்வண்ணம் கருத்தொருமித்தல்லுக்கு வரவில்லை
என்றே
தெரிகிறது.
TANE க்கு BMP யில் இடம் கிடைத்தால் சரி - நாம் அதை ஏற்று உழைக்கலாம். ஆனால்
TANE
தொடர்ந்து PUA (Private User Area) விலேதான் வாசம் செய்யத்தான் வேண்டும்
என்பதுதான்
விதி என்றால், அதற்காக இலவு காத்த கிளிகள் போல தமிழர்கள் ஏன் காலத்தை வீணடிக்க
வேண்டும்? அதை விட தற்போதைய தமிழ் ஒருங்குறியை பாவிப்பதில் உள்ள பிரச்சினைகளை
(அதாவது rendering problems போல) தீர்த்து மேம்பாடுகளை ஏற்படுத்துவதில் மேலும்
தீவிரம் காட்டலாம்.
TUNE-RFC யில் ஜெயராதாவின் கேள்விக்கு எனது பதில்
http://tech.groups.yahoo.com/group/tune_rfc/message/830 இல் உள்ளது -
தற்போது உள்ள தமிழ் ஒருங்குறியில் மென்பொருட்களை தமிழாக்கங்கள் செய்வோர்கள்
தங்கள்
மொழிபெயர்ப்பு காரியங்களை TANE க்காக பின் போடாதீர்கள் என்று எழுதினேன். அதை
மீண்டும்
சொல்கிறேன் இங்கு. அரவிந் ராஜேஷ் தமிழ்மணியின் கருத்தையும் வாசிகக்வும் இதில்:
http://tech.groups.yahoo.com/group/tune_rfc/message/831
~சேது
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
--
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061225/2af8663f/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list