[உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 41, Issue 2(தமிழ் கணிமை பேசுமா? விக்சனரி)

த*உழவன் tha.uzhavan at gmail.com
Thu Nov 5 06:54:02 GMT 2009


 இம்முதற் மின்மடல் மூலம், இக்குழுமத்திலும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னைப்பற்றி ஒரிரு வரிகள்..

 நான் இந்திய மாநிலங்களுள் ஒன்றான, தமிழ் நாட்டில்  சேலம் மாவட்டத்தில்
வசிப்பவன். தமிழ் விக்சனிரியில், ஓரிரு வருடங்களாகத் தொடர்ந்து பங்களிப்பவன்.
எனது தொழிலுக்கும், கணினிக்கும் எந்தத் தொடர்புமில்லை. எனினும், கணினியில்
தமிழைப் பார்ப்பதில் எனக்கு அளவிலா ஆனந்தம் கிடைப்பதால், தொடர்ந்து
தமிழ்கணிமையில் ஈடுபாடு உடையவனாக இருக்கிறேன்.

திரு.ஆமாச்சுவால் இக்குழுமத்தில் இணைந்தேன்.

 தமிழ் உபுண்டு பயன்பாடு குறித்த, சிறுசிறு வழிகாட்டல்களை, அவ்வப்போது
இங்கு கேட்கலாம் என்றுள்ளேன். இங்கு தெளிவாகக் கற்றுணர்ந்த பின்பு, பிறருக்கும்
அறிமுகம் செய்வேன்.

விக்சனிரி குறித்து, திரு.வே.இளஞ்செழியன் கணினி தமிழ் பேசுமா? என்ற மின்னூலில்
எழுதியிருந்தார்.மகிழ்ச்சி.

1) தமிழ் கணிமைச்சொற்களையும், ஊடகங்களுடன் தெளிவுப்படுத்தினால் குழப்பத்தைத்
தவிர்க்கலாம். எடுத்துக்காட்டு, பின்வரும் தொடுப்பைக்காணவும்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

ஒரு சாதரணப் பயனாளனுக்குத் தெரிந்து இருக்க வேண்டிய தமிழ் கணிமைச்சொற்களை,
பின்வரும் விக்சனரி பகுப்பில் பகுக்கத் துவங்கியுள்ளேன்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அல்லது அடிப்படையாகக் கருதும் சொற்களை எனக்கு
தந்தால், அதனை தக்க ஊடகங்களுடன் என்னால் விக்சனிரியில் விக்கியாக்கம் செய்ய
முடியும்.
(எ.கா) அடைவு -folder, இடைமுகப்பு - interface, mouse -  சுட்டி,சொடுக்கி

2) mouse என்பதற்கு சொடுக்கி, சுட்டி, என்பது போன்ற பல சொற்களை இங்கே ஒருங்கே
பதிவு செய்யலாம். பிறகு, அவற்றின்  தகுதரம் பற்றி முடிவு எடுக்கலாம்.

3)எத்தகையப் பணிகள் விக்சனிரியில் செய்யப்பட்டால் நல்லது என்று வழிகாட்டினால்,
நான் அவற்றை விக்சனிரியல் செய்கிறேன்.

நன்றி! வணக்கம்.

-- 
த*உழவன்

(* தமிழ்; தகவல்; தன்னம்பிக்கை)
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091105/82a81b6a/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: to ta.ubundu.JPG
Type: image/jpeg
Size: 68793 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091105/82a81b6a/attachment-0001.jpeg 


More information about the Ubuntu-l10n-tam mailing list