[உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 41, Issue 2(தமிழ் கணிமை பேசுமா? விக்சனரி)

Elanjelian Venugopal tamiliam at gmail.com
Thu Nov 5 12:20:39 GMT 2009


தங்கள் வருகை நல்வரவாகட்டும்!

'mouse' என்ற சொல்லைக் குறித்த ஒரு வலைச்சுட்டியை நீங்கள் கொடுத்திருந்தீர்கள்.
அதே விக்சனரி அக்கருவிக்கு வேறு சில சொற்களையும் கொண்டுள்ளது என்பதனைப்
பின்வரும் சுட்டியில் காண்க: http://ta.wiktionary.org/wiki/mouse

-இ.

2009/11/5 த*உழவன் <tha.uzhavan at gmail.com>

>  இம்முதற் மின்மடல் மூலம், இக்குழுமத்திலும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
> என்னைப்பற்றி ஒரிரு வரிகள்..
>
>  நான் இந்திய மாநிலங்களுள் ஒன்றான, தமிழ் நாட்டில்  சேலம் மாவட்டத்தில்
> வசிப்பவன். தமிழ் விக்சனிரியில், ஓரிரு வருடங்களாகத் தொடர்ந்து பங்களிப்பவன்.
> எனது தொழிலுக்கும், கணினிக்கும் எந்தத் தொடர்புமில்லை. எனினும், கணினியில்
> தமிழைப் பார்ப்பதில் எனக்கு அளவிலா ஆனந்தம் கிடைப்பதால், தொடர்ந்து
> தமிழ்கணிமையில் ஈடுபாடு உடையவனாக இருக்கிறேன்.
>
> திரு.ஆமாச்சுவால் இக்குழுமத்தில் இணைந்தேன்.
>
>  தமிழ் உபுண்டு பயன்பாடு குறித்த, சிறுசிறு வழிகாட்டல்களை, அவ்வப்போது
> இங்கு கேட்கலாம் என்றுள்ளேன். இங்கு தெளிவாகக் கற்றுணர்ந்த பின்பு, பிறருக்கும்
> அறிமுகம் செய்வேன்.
>
> விக்சனிரி குறித்து, திரு.வே.இளஞ்செழியன் கணினி தமிழ் பேசுமா? என்ற மின்னூலில்
> எழுதியிருந்தார்.மகிழ்ச்சி.
>
> 1) தமிழ் கணிமைச்சொற்களையும், ஊடகங்களுடன் தெளிவுப்படுத்தினால் குழப்பத்தைத்
> தவிர்க்கலாம். எடுத்துக்காட்டு, பின்வரும் தொடுப்பைக்காணவும்.
>
>
> http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
>
> ஒரு சாதரணப் பயனாளனுக்குத் தெரிந்து இருக்க வேண்டிய தமிழ் கணிமைச்சொற்களை,
> பின்வரும் விக்சனரி பகுப்பில் பகுக்கத் துவங்கியுள்ளேன்.
>
>
> http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
>
> நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அல்லது அடிப்படையாகக் கருதும் சொற்களை
> எனக்கு தந்தால், அதனை தக்க ஊடகங்களுடன் என்னால் விக்சனிரியில் விக்கியாக்கம்
> செய்ய முடியும்.
> (எ.கா) அடைவு -folder, இடைமுகப்பு - interface, mouse -  சுட்டி,சொடுக்கி
>
> 2) mouse என்பதற்கு சொடுக்கி, சுட்டி, என்பது போன்ற பல சொற்களை இங்கே ஒருங்கே
> பதிவு செய்யலாம். பிறகு, அவற்றின்  தகுதரம் பற்றி முடிவு எடுக்கலாம்.
>
> 3)எத்தகையப் பணிகள் விக்சனிரியில் செய்யப்பட்டால் நல்லது என்று வழிகாட்டினால்,
> நான் அவற்றை விக்சனிரியல் செய்கிறேன்.
>
> நன்றி! வணக்கம்.
>
> --
> த*உழவன்
>
> (* தமிழ்; தகவல்; தன்னம்பிக்கை)
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091105/d6fd4aba/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list