[உபுண்டு_தமிழ்]ஓபன் ஆபிஸ் தமிழாக்கம்

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Mon Feb 16 07:39:26 GMT 2009


2009/2/16 Elanjelian Venugopal <tamiliam at gmail.com>:
> வணக்கம்.
>
> 2009 பிப்ரவரி 13 20:11-ல், கா. சேது | K. Sethu <skhome at gmail.com> எழுதியது:
>
>> Pootle இன் எண்ணிக்கைகளில் தவறுகள் இருக்கலாம் எனத்தெரிகிறது. தொடர்பான
>> எனது மடலை http://lists.thamizha.com/pipermail/freetamilcomputing_lists.thamizha.com/2009-February/000992.html
>> பக்கத்தில் பார்க்கவும்.
> ------------
> தவறுகளில்லை. பயனர் முகப்பிலுள்ள மொத்த சொற்களை (88,725 சொற்கள்) ஒரு
> எண்ணும், மொத்த சரங்களை (26,944 சரங்கள்) மற்றொரு எண்ணும் குறிப்பதானால்
> மாறுபாடு இருப்பதாகத் தோன்றுகின்றது. இதுவரை 23,198 சரங்கள்
> தமிழாக்கப்பட்டுள்ளன.
>
> அதே வேளையில், நீங்கள் குறிப்பிட்டதுபோல், பல சரங்களில் (அதாவது 5,118
> சரங்களில்) மொழிபெயர்ப்புச் சிக்கலிருப்பதாக பூட்டல் காட்டுகின்றது.
> இச்சிக்கல்களை நான் சரிசெய்து வருகின்றேன்.
>
> நீங்கள் தயக்கமின்றி ஓபன் ஆபிஸ் தமிழாக்கத்தைப் பூட்டலில் செய்யலாம்.
>
> அன்புடன்,
> வே. இளஞ்செழியன்
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
சொற்கள்(Words), சரங்கள் (Strings) வேறுபாடுகளை சுட்டிக்காட்டி
தெளிவாக்கியமைக்கு நன்றி.

ஆயினும் .po கோப்புக்களில் ஏற்கனவே  மொழிபெயர்க்கப்பட்டுள்ளவைகளின்
எண்ணிக்கை  தமிழ் மொழியாக்கத்துக்கு ஆங்கில சரத்தையே இட்டுள்ளவைகளையும்
சேர்த்தே என ஊகிக்கிறேன்.

காட்டாக [ Tamil ] [ OO.o PO UI ] basic / source / classes.po கோப்பைப் பாருங்கள்
 [ http://pootle2.sunvirtuallab.com/ta/openoffice_org/basic/source/classes.po?translate=1&view=1
].

135 சரங்களில் 126 மொழிபெயர்க்கப்பட்டுள்ளாதாகவும், 9
மொழிபொயர்க்கப்படவில்லை மற்றும் 3 "Fuzzy" எனவும் குறிப்பு உள்ளது.

ஆனால் ஒரு பக்கத்தில் 10 சரங்கள் எனவுள்ள ஒவ்வொரு பக்கங்களையும் திறந்து
பார்க்கையில் சரங்கள் 121 முதல் 130 வரை இடையில் 6 சரங்களில்
மொழிபெயர்ப்புகளுக்கு வெற்றாகவுள்ளன. ஏனைய எல்லா பக்கங்களையும்
பார்ப்பின் மொழிபொயர்ப்புகள் வெற்றாகவல்லாமல் ஆனால் ஆங்கில சரமாகவே
உள்ளவைகளே கூடுதாலாக உள்ளன. தமிழாக்கப்பட்ட சரங்கள் கிட்டத்தட்ட 40
மட்டுமே!

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list