[உபுண்டு_தமிழ்]ஓபன் ஆபிஸ் தமிழாக்கம்

Elanjelian Venugopal tamiliam at gmail.com
Mon Feb 16 04:45:40 GMT 2009


வணக்கம்.

2009 பிப்ரவரி 13 20:11-ல், கா. சேது | K. Sethu <skhome at gmail.com> எழுதியது:

> Pootle இன் எண்ணிக்கைகளில் தவறுகள் இருக்கலாம் எனத்தெரிகிறது. தொடர்பான
> எனது மடலை http://lists.thamizha.com/pipermail/freetamilcomputing_lists.thamizha.com/2009-February/000992.html
> பக்கத்தில் பார்க்கவும்.
------------
தவறுகளில்லை. பயனர் முகப்பிலுள்ள மொத்த சொற்களை (88,725 சொற்கள்) ஒரு
எண்ணும், மொத்த சரங்களை (26,944 சரங்கள்) மற்றொரு எண்ணும் குறிப்பதானால்
மாறுபாடு இருப்பதாகத் தோன்றுகின்றது. இதுவரை 23,198 சரங்கள்
தமிழாக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், நீங்கள் குறிப்பிட்டதுபோல், பல சரங்களில் (அதாவது 5,118
சரங்களில்) மொழிபெயர்ப்புச் சிக்கலிருப்பதாக பூட்டல் காட்டுகின்றது.
இச்சிக்கல்களை நான் சரிசெய்து வருகின்றேன்.

நீங்கள் தயக்கமின்றி ஓபன் ஆபிஸ் தமிழாக்கத்தைப் பூட்டலில் செய்யலாம்.

அன்புடன்,
வே. இளஞ்செழியன்


More information about the Ubuntu-l10n-tam mailing list