[உபுண்டு_தமிழ்]கணிமொழி - அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Sat May 17 04:49:58 BST 2008


2008/5/16 ஆமாச்சு <amachu at ubuntu.com>:

>
> இப்படி செய்ய வேண்டும்.  இதற்கு வேறு சில பரிந்துரைகளும் வந்துள்ளன.
> கட்டுரைக்கு அடியிலேயே
> பின்னூட்டம் தரும் வசதியும் அதில் அடங்கும்.
> எப்படி செயற்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து விரைவில்
> செயற்படுத்துகிறோம்.
>

அவ்வாறான ஏற்பாடு  விரைவில் வரின் மிக நன்று.


> ஏற்கனவே உள்ள மென்பொருட்களான வோர்ட்பிரஸ், யோம்லா, துருபல் போன்றவற்றை
> பயன்படுத்தலாம் ஆயினும்
> இதனை வாசகர் கருத்து போன்றவற்றின் அடிப்படையில் அதன் போக்கிலேயே வளர்த்தெடுக்க
> விருப்பம். ஆதலா
> ல் தான் துவக்கத்தில் ஹச்டிஎம்எல் ஆக கொண்டு வந்தோம்.
>
> அவசியம் ஏற்படின் இத்தகைய மென்பொருட்களை பயன்படுத்தவும் உத்தேசமே.
>
> மேலும் ஒரு மாதம் என்பது ஆரம்ப கால இலக்கே. இடைவெளியை காலப்போக்கில் குறைக்க
> உத்தேசம்.
>

நன்று.



>
> > ஒருவர் தன் வலைப்பதிவில்  (Creative Commons போன்ற) அளிப்புரிமையுடன்
> > எழுதப்பட்ட கட்டுரைகளை கணிமொழியில் வெளியிட அல்லது தொடுப்புக்காட்டி
> > பரப்ப வேண்டுகோள் முன்வைப்பின் ஏற்றுக்கொள்ளப்படுமா?
> >
>
> அத்தகைய கட்டுரைகளை மீண்டும் வெளியிடுவதில் தயக்கம் இல்லை.
>
> தொடுப்பு எனும் போது ஒரு பக்கப்பட்டியில் பயனுள்ள இணைப்புகள் போன்று தருவதை
> சுட்டுகிறீர்களா?
>
> அல்லது ஒரு கட்டுரையில் தொடர்புடைய இணைப்பாக தருவதை சொல்கிறீர்களா?
>

பக்கப்பட்டியில் பயனுள்ள இணைப்புகள் போன்று தருவதைத்தான் கூறினேன். (தொடுப்பு =
link). அதாவது ஏற்கனவே தகுந்த அளிப்புரிமையுடன் வலைப்பதிவாக வெளியிடப்பட்ட
பயனுள்ள கட்டுரைகளுக்கு தொடுப்புப்புக்கள்




>
> > ஒருவர் அளிக்கும் கட்டுரையை அப்படியே மாற்றங்கள் அல்லாமல்
> > வெளியிடப்படுமா? அல்லது தொகுப்பாளர்(கள்) மாற்றங்கள் / திருத்தங்கள்
> > தேவையெனக் கருதுகையில் எழுதுனரின் கலந்தாலோசித்தல்களுடன் மாற்றங்கள்
> > இறுதியாக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படுமா?
> >
>
> இது வரையில் இரண்டு விதமாகவும் நடந்துள்ளன. பொதுவாக கட்டுரை இயற்றியவர்
> தவறுகளை செப்பனிட்டு
> இடும் படி பணிக்கும் போது அதனைப் பார்வையிட்டு அவருடன் கலந்தோசித்து
> செய்துள்ளோம்.
>
> இது வரையிலுள்ள அனுபவம். எழுத்துப் பிழைகள் சரிசெய்யப் பட்டுள்ளன.
> சரவையிடுகையில் புரியாது
> இருப்பின் தெளிவு கேட்டு பின்னர் திருத்தம் பெற்றுள்ளன.
>
> எழுத்துப் பிழைகளுக்காக பார்க்கப்படும்.
>
> இயற்றியவரிடமிருந்து சரிபார்க்கும் படி விண்ணப்பம் இல்லாத பட்சத்தில் அப்படியே
> வெளியிடவே உத்தே
> சம்.
>

ஏற்றுக்கொள்ளகூடிய கொள்கைகளே.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080517/9f146f52/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list