[உபுண்டு_தமிழ்]கணிமொழி - அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
ஆமாச்சு
amachu at ubuntu.com
Fri May 16 11:34:23 BST 2008
On Thursday 15 May 2008 11:43:47 கா. சேது | K. Sethu wrote:
> ஆமாச்சு மற்றும் கணிமொழி வெளியீட்டில் பங்குபற்றும் நண்பர்களே,
>
> கட்டுரைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாற்றுக் கருத்துக்கள்,
> விளக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள் என பலவற்றையும் வாசகர்கள் மறுமொழி
> மடல்களில் எழுதலாம். அவற்றை மாததிற்கு ஒரு முறை தான் தொகுத்து அடுத்த
> இதழுடன் வெளியிடுவதை விட ஒரு துணையான வலைப்பதிவு தளத்தில் வரும் மடல்களை
> உடனுக்குடன் வெளியிடின் பயன் மிகும். அவ்வாறு ஒரு துணை கருத்து
> மன்றத்தையும் ஏற்படுத்தி நடத்துவதைப்பற்றி ஆலோசிக்கும்படி
> பரிந்துரைக்கிறேன்.
>
இப்படி செய்ய வேண்டும். இதற்கு வேறு சில பரிந்துரைகளும் வந்துள்ளன. கட்டுரைக்கு அடியிலேயே
பின்னூட்டம் தரும் வசதியும் அதில் அடங்கும்.
எப்படி செயற்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து விரைவில் செயற்படுத்துகிறோம்.
ஏற்கனவே உள்ள மென்பொருட்களான வோர்ட்பிரஸ், யோம்லா, துருபல் போன்றவற்றை பயன்படுத்தலாம் ஆயினும்
இதனை வாசகர் கருத்து போன்றவற்றின் அடிப்படையில் அதன் போக்கிலேயே வளர்த்தெடுக்க விருப்பம். ஆதலா
ல் தான் துவக்கத்தில் ஹச்டிஎம்எல் ஆக கொண்டு வந்தோம்.
அவசியம் ஏற்படின் இத்தகைய மென்பொருட்களை பயன்படுத்தவும் உத்தேசமே.
மேலும் ஒரு மாதம் என்பது ஆரம்ப கால இலக்கே. இடைவெளியை காலப்போக்கில் குறைக்க உத்தேசம்.
> ஒருவர் தன் வலைப்பதிவில் (Creative Commons போன்ற) அளிப்புரிமையுடன்
> எழுதப்பட்ட கட்டுரைகளை கணிமொழியில் வெளியிட அல்லது தொடுப்புக்காட்டி
> பரப்ப வேண்டுகோள் முன்வைப்பின் ஏற்றுக்கொள்ளப்படுமா?
>
அத்தகைய கட்டுரைகளை மீண்டும் வெளியிடுவதில் தயக்கம் இல்லை.
தொடுப்பு எனும் போது ஒரு பக்கப்பட்டியில் பயனுள்ள இணைப்புகள் போன்று தருவதை சுட்டுகிறீர்களா?
அல்லது ஒரு கட்டுரையில் தொடர்புடைய இணைப்பாக தருவதை சொல்கிறீர்களா?
> ஒருவர் அளிக்கும் கட்டுரையை அப்படியே மாற்றங்கள் அல்லாமல்
> வெளியிடப்படுமா? அல்லது தொகுப்பாளர்(கள்) மாற்றங்கள் / திருத்தங்கள்
> தேவையெனக் கருதுகையில் எழுதுனரின் கலந்தாலோசித்தல்களுடன் மாற்றங்கள்
> இறுதியாக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படுமா?
>
இது வரையில் இரண்டு விதமாகவும் நடந்துள்ளன. பொதுவாக கட்டுரை இயற்றியவர் தவறுகளை செப்பனிட்டு
இடும் படி பணிக்கும் போது அதனைப் பார்வையிட்டு அவருடன் கலந்தோசித்து செய்துள்ளோம்.
இது வரையிலுள்ள அனுபவம். எழுத்துப் பிழைகள் சரிசெய்யப் பட்டுள்ளன. சரவையிடுகையில் புரியாது
இருப்பின் தெளிவு கேட்டு பின்னர் திருத்தம் பெற்றுள்ளன.
எழுத்துப் பிழைகளுக்காக பார்க்கப்படும்.
இயற்றியவரிடமிருந்து சரிபார்க்கும் படி விண்ணப்பம் இல்லாத பட்சத்தில் அப்படியே வெளியிடவே உத்தே
சம்.
-- ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list