[உபுண்டு_தமிழ்]கணிமொழி - அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
கா. சேது | K. Sethu
skhome at gmail.com
Thu May 15 07:13:47 BST 2008
ஆமாச்சு மற்றும் கணிமொழி வெளியீட்டில் பங்குபற்றும் நண்பர்களே,
கட்டுரைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாற்றுக் கருத்துக்கள்,
விளக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள் என பலவற்றையும் வாசகர்கள் மறுமொழி
மடல்களில் எழுதலாம். அவற்றை மாததிற்கு ஒரு முறை தான் தொகுத்து அடுத்த
இதழுடன் வெளியிடுவதை விட ஒரு துணையான வலைப்பதிவு தளத்தில் வரும் மடல்களை
உடனுக்குடன் வெளியிடின் பயன் மிகும். அவ்வாறு ஒரு துணை கருத்து
மன்றத்தையும் ஏற்படுத்தி நடத்துவதைப்பற்றி ஆலோசிக்கும்படி
பரிந்துரைக்கிறேன்.
ஒருவர் தன் வலைப்பதிவில் (Creative Commons போன்ற) அளிப்புரிமையுடன்
எழுதப்பட்ட கட்டுரைகளை கணிமொழியில் வெளியிட அல்லது தொடுப்புக்காட்டி
பரப்ப வேண்டுகோள் முன்வைப்பின் ஏற்றுக்கொள்ளப்படுமா?
ஒருவர் அளிக்கும் கட்டுரையை அப்படியே மாற்றங்கள் அல்லாமல்
வெளியிடப்படுமா? அல்லது தொகுப்பாளர்(கள்) மாற்றங்கள் / திருத்தங்கள்
தேவையெனக் கருதுகையில் எழுதுனரின் கலந்தாலோசித்தல்களுடன் மாற்றங்கள்
இறுதியாக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படுமா?
கணமொழி முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்
~சேது
2008/5/15 ஆமாச்சு <amachu at ubuntu.com>:
> வணக்கம்
>
> கணிமொழியின் அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
>
> உங்கள் படைப்புகள் அடுத்த மாதப் பிறப்பிற்கு ஒரு வாரம் முன்னதாக (08/06/2008) எம்மை வந்தடையும்
> படி பார்த்துக் கொள்ளவும்.
>
> சுருக்கமாக சொல்லிடின்,
>
> * விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
> * கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த விடயமாக இருத்தல் வேண்டும்.
> * பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு காபிலெப்ட்.
> * தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார்
> எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
> * கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவை
> யாகவும் இருக்கலாம்.
> * படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
> * தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசு
> வைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
> * தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
> * தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக திட்டப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கவும்.
> * தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் தாங்கள் பங்களிக்கலாம்.
> * ஐயங்களிருப்பின் திட்டப் பொறுப்பாளருக்கு (shriramadhas at gmail.com) மடலியற்றவும்.
>
> விரிவான விவரங்களுக்கு கணிமொழியின் அறிமுகப் பக்கத்தை அணுகவும்:
> http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html
>
> உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
>
> -- ஆமாச்சு
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
More information about the Ubuntu-l10n-tam
mailing list