[உபுண்டு_தமிழ்]கணிமொழி - அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
ஆமாச்சு
amachu at ubuntu.com
Thu May 15 04:20:21 BST 2008
வணக்கம்
கணிமொழியின் அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் படைப்புகள் அடுத்த மாதப் பிறப்பிற்கு ஒரு வாரம் முன்னதாக (08/06/2008) எம்மை வந்தடையும்
படி பார்த்துக் கொள்ளவும்.
சுருக்கமாக சொல்லிடின்,
* விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
* கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த விடயமாக இருத்தல் வேண்டும்.
* பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு காபிலெப்ட்.
* தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார்
எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
* கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவை
யாகவும் இருக்கலாம்.
* படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
* தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசு
வைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
* தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
* தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக திட்டப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கவும்.
* தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் தாங்கள் பங்களிக்கலாம்.
* ஐயங்களிருப்பின் திட்டப் பொறுப்பாளருக்கு (shriramadhas at gmail.com) மடலியற்றவும்.
விரிவான விவரங்களுக்கு கணிமொழியின் அறிமுகப் பக்கத்தை அணுகவும்:
http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html
உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
-- ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list