[உபுண்டு_தமிழ்]பழைய கணினிகளில் ஹார்டி

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Tue May 13 10:13:03 BST 2008


On 5/8/08, senthil raja <senthil.nkkl at gmail.com> wrote:
> Thanks sethu..
>
> i will try xubuntu..

சுபுண்டுவின் RAM தேவைகள் உபுண்டு மற்றும் குபுண்டு நிறுவல்களை விட
குறைவாயினும் நிறுவும் போதும் நிறுவிய பின்னர் பயன்படுத்தப்படும்
மென்பொருட்களையும் பொருத்து 128 MB க்கு கூடுதலாகவும் தேவைப்படலாம்
எனவும் தெரிகிறது. பார்க்க : http://www.xubuntu.org/get#hardy  -
Minimum System requirements :

>
> Minimum system requirements
>
> To run the Desktop CD (LiveCD + Install CD), you need 128 MB RAM to run or 192 MB RAM to install. The Alternate Install CD only requires you to have 64 MB RAM.
>
> To install Xubuntu, you need 1.5 GB of free space on your hard disk.
>
> Once installed, Xubuntu can run with 192 MB RAM, but it is strongly recommended to have at least 256 MB RAM.

சுபுண்டு நிகழ்வட்டுக்கான ISO வின் அளவு 544 MB  மட்டுமே. ஆனால் அது ஓபன்
ஆபிசுக்கான பொதிகள் ஒன்றும் உள்ளடக்கலாமலேயே. எனவே ஒரு கணினியில் ஓபன்
ஆபிஸ் நிறுவி அதற்காக பதிவிறக்கப்பட்ட எல்லா deb பொதிகளையும் இன்னொரு
இறுவட்டில் தாங்கள் எடுத்தச்செல்ல வேண்டியிருக்கும் பழைய கணினிகளில்
நிறுவ.

சுபுண்டு இறுவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள உரைதிருத்தி அபிவேர்ட் ஆகும்.
லினக்ஸ் இயங்குத்தளங்களுக்கான அபிவேர்டில் l10n தமிழாக்கம் வாசிக்கத்
தெளிவாக இருப்பினும், தமிழ் உள்ளிடலுக்கு ஒருங்குறி இரண்டாம் கட்ட
எழுத்துருவாக்கத்துக்கு (level 2-implementation) இதுவரை துணை
கொடுக்கப்படவில்லை. அதனால் கொம்புகள் இடம்மாறி மெய்யின் பின் வருகின்றன.
ஆக சுபுண்டுவில் ஓபன் ஆபிஸ் நிறுவல் தமிழ் பயனர்கட்கு அவசியமாகிறது.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list