[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
கா. சேது | K. Sethu
skhome at gmail.com
Sat May 3 10:13:18 BST 2008
2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
>
> 2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
>
> >
> >
> > 2008/4/28 ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com>:
> >
> > > http://ubuntu-tam.org/wiki/index.php?title=HardyHeron
> > >
> > > எமது முதற்கட்ட அனுபவங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பக்கத்தில் உள்ளன.
> > >
> >
> >
> >
> > நண்பர்களே உங்களது /etc/X11/xorg.conf கோப்பில் இருப்பவற்றை இங்கே உள்ளிட
> > முடியுமா?
>
>
>
> Section "Files"
> FontPath "/usr/share/fonts/X11/misc"
> FontPath "/usr/share/fonts/X11/cyrillic"
> FontPath "/usr/share/fonts/X11/100dpi/:unscaled"
> FontPath "/usr/share/fonts/X11/75dpi/:unscaled"
> FontPath "/usr/share/fonts/X11/Type1"
> FontPath "/usr/share/fonts/X11/100dpi"
> FontPath "/usr/share/fonts/X11/75dpi"
> FontPath "/usr/share/fonts/truetype"
> # path to defoma fonts
> FontPath " /var/lib/defoma/x-ttcidfont-conf.d/dirs/TrueType/"
> EndSection
>
> Section "Module"
> Load "i2c"
> Load "bitmap
> Load "ddc"
> Load "dri"
> Load "extmod"
> Load "freetype"
> Load "glx"
> Load "int10"
> Load "type1"
> Load "vbe"
> EndSection
>
>
> இக்கோப்பில் இயல்பாக இருந்திட வேண்டிய மேற்காணும் வரிகள் ஹார்டியின் உபுண்டு
> குபுண்டு (கேபசூ4) ஆகிய இரண்டிலும் விடுபட்டிருந்தன.
>
> ஆயினும் இவற்றை உள்ளிட்டு கோப்பைக் காத்து X தனை மீளத்துவக்கியும்
> பலனில்லைதான். அதைத் தவிர வேறென்ன விட்டு போயிருக்கும் என ஆராய வேண்டும்.
>
>
ஆமாச்சு, மற்றும் நண்பர்களே
xorg.conf இல் உள்ளடக்கப்படாமை ஒரு காரணாமல்ல எனக் கருதுகிறேன்.
உபுண்டு / கநோம் சூழலில் தான் நான் அநேக ஆய்வுகளைச் செய்துள்ளேன் இதுவரை.
இயல்பு எழுத்துருக்கள் (Sans, Monospace) கட்ஸியுடன் ஒப்பிடுகையில் சீரற்ற
அளவில் குறைந்து நிறம் மங்கி தென்படுவதன் காரணி எங்கிருந்து என்பதை
ஊகித்துள்ளேன்.
இன்றைய irc கலந்துரையாடலுக்கு வர இயலாது வேறு காரியம் ஒன்றுக்கு போகவுள்ளதல்.
பரவாயில்லை - பின்னர் வந்து திரைக்காட்சிகளுடன் விரிவாக எழுதுவேன்.
தற்போதைக்கு இம்மடலில் முக்கிய அவதானங்களை பின்வருமாறு ஓரளவு சுருக்கமாக
பட்டியலிடுகிறேன்.
1. உபுண்டு, குபுண்டு... / கநோம், கேபசூ எல்லாவற்றிற்கும் தரப்படும்
தமிழிற்கான எழுத்துருக்கள்:
i. ttf-indic-fonts-core பொதி /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/
அடைவில் நிறுவும் Lohit Tamil (lohit_ta.ttf) - அதில் 2004 இல் ஒருங்குறி
4.1.0 இல் சேர்க்கப்பட்ட ஶ (U+0BB6 - SHA) மற்றும் தமிழ் சைபர்
ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இது இயல்பாகவே நிறுவப்பட்டிருக்கும்
ii. FreeSans, Free Serif (அத்துடன் புலனாய்வு செய்யப்படாத வேறு சிலவும்
இருக்கலாம்) களிலும் மேற்கூறிய எழுத்துக்களையும் அதன் முன்னர் ஒருங்குறிக்கு
உட் சேர்க்கப்பட்டுள்ள எண், பற்று, வரவு போன்ற குறியீடுகளையும் தவிர்ந்த ஆனால்
ஏனைய எழுத்துக்களை உள்ளடக்கியன. அவற்றில் என்னென்ன எழுத்துருவங்கள் (glyphs)
உள்ளன, விட்டுப்போயுள்ளன என்பதை fontforge இல் திறந்து பார்கலாம். இவ்
எழுத்துருக்களும் இயல்பாகவே நிறுவப்பட்டிருப்பன.
iii. ttf-tamil-fonts பொதி /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts அடைவில்
நிறுவும் TSCu_Paranar (+bold and italic versions), TSCU_Times, TSCU_Comic,
TAMu_Maduram, TAMu_Kadampari, TAMu_Kalyani ஆகியன. அவற்றிலும் மேலே ii இல்
குறிப்பிட்டவாறு பல எழுத்துக்கள் கிடையா. இவ்வ்ழுத்துருக்களை மேலதிகமாக
நிறுவுறுகிறோம். ஏனைய தமிழிற்கான துணை பொதிகள் நிறுவுகையில் கட்டாயமாக இவை
நிறுவப்படும்.
2. அவ்வெழுத்துருக்களில் Lohit Tamil தான் முக்கியம் - தளத்தில் அகல
எழுத்துருக்கு (Fixed Width Font) தமி.ழிற்கான அடிப்படை அமைப்புக்கு
இவ்வெழுத்துரு தான் பயன் படுத்தப்படுகிறது எனபதை கணித்துள்ளேன் அடுத்து
காட்டும் சோதனை விளைவு காரணமாக
3. ஹார்டி கநோம்மில் lohit_ta.ttf யை அகற்றி font regeneration க்கு fc-cache
கட்டளை செய்தேன் :
sudo rm /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_ta.ttf
sudo fc-cache -fv
விளவு: menu க்களிலும் gedit இலும் அளவு சரியாகி வாசிக்கக்கூடியதாக மாறியன.
அதாவது கநோம் சூழலில் பிரச்சினை அகன்றது போல தோற்றம்.
ஆயினும் இறுதி தீர்வல்ல. அதைப்பற்றி ஆய்வுக்கு வருமுன்:
4. lohit_ta.ttf அகற்றுவதால் மேலே 1-ii, iii களில் குறிப்பிட்டது போல பல
குறியீடுகளும் sha வும் விட்டுப்போய் விடும். அதற்குத் தீர்வு
சூரியன் டொட் காம் நிறுவுவது.
5. எனது கட்ஸி அனுபவத்திலும் தற்போதும் அந்த lohit_ta.ttf இருப்பினும்
அகற்றினும் ஈகார உயிர் மெய்களில் (கீ, சீ தீ, ....) சுழி அகன்று தோற்றம்
தருமாயின் வேறு ஒரு அகல எழுத்துருவான உமரின் TheneeUniTx நிறுவுவதன் மூலம்
சீராக்கலாம். அதை கநோம் சூழலில் வழக்கமாக நான் பாவிக்கிறேன். ஆனால்
கேபசூவில் அதற்கு சில பிரச்சினைகள் உள்ளன - அவற்றைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்.
6. மேலும் கேபசூ வில் இன்னும் சோதனைகள் பல செயத பின்னே lohit_ta அகற்றின்
என்னவாகிறது என்பதை எழுதுவேன்.
7. X இன் fontconfig கட்டகத்துக்கு மேலாக "Dfoma" எனப்படும் Debian Font
Management Framework த்தான் உபுண்டுக்களில் எழுத்துருக்களின் அமைப்புக்களை
ஆக்க மேலாண்மை செய்கிறது எனவறிந்தேன். அடிப்படையில் என்னென்ன நடைபெறுகின்றன
என்பனவற்றை தெளிவாக ஆய்ந்து அறிவது நன்று.
8. தீர்க்கப்பட வேண்டிய வழுவானது lohit_ta.ttf யை கட்ஸியில் போலல்லாது
ஹார்டியில் சீரற்றதாகாக்குவது எது - dfoma விலா அல்லது வேறு ஏதாவதினாலா.
அத்துடன் வழு அகற்றும் patch பெறுதல்.
பின்னர் தொடர்ந்து எழுதுவேன்.
~சேது
>
> --
> ஆமாச்சு
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080503/6c483625/attachment-0001.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list