[உபுண்டு_தமிழ்]பயிற்றுனர் முழுமையான முறையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் தளம்

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Feb 15 06:40:32 GMT 2008


On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote:
> இது விதமாக எமது பயிற்றுனர்களுக்கும் ஏதாவது முழுமையான முறையான பயிற்சிகள்
> ஏதேனும் வழங்கப்படின் சிறப்பான முறையில் பயனாளர்களை எதிர்காலத்தில் திறன்பட
> உருவாக்கக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன், இவ்வாறான வாய்ப்புகள் ஏதும்
> உண்டா?

நாம் கம்யூனிட்டி. இதைத் தாண்டி உபுண்டுக்கு கார்பொரேட் அந்தஸ்து வழங்குவது கனோனிகல். 

நாம் இப்படி ஒரு புறம் இருக்க அவை இணையாக தனியே செயல்படுகின்றன. அவற்றின் மூலம் எவ்வாறு ரெ
ட்ஹாட் பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சான்றுகள் வழங்கப்படுகின்றனவோ அதேப் போல் கனோனிகலும் 
முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கும் கம்யூனிட்டிகளுக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. 
 
அவற்றை கம்யூனிட்டிகளுக்கு முறையாக பகிர்ந்து கொள்ளும் முறை இன்னும் வரவில்லை. உபுண்டு வாரச் 
செய்திகளும் உபுண்டு தளத்தையும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சில நேரங்களில் கம்யூனிட்டிக்கு தெரியாது கனோனிகல் பங்கெடுக்க போய் சிக்கல்களும் நேர்ந்ததுண்டு. 
பிரான்ஸில் சமீபத்திய குனு/ லினக்ஸ் நிகழவொன்றுக்கு கனோனிகல் ஸ்பான்சர் செய்யப் போய் எப்படி 
எங்களைக் கேக்காமல் நீங்க செய்யலாமுன்னு ஒரு சிக்கல்! 

இப்போதைக்கு இருக்கும் வலிமையைக் கொண்டு குனு/ லினக்ஸை எப்படி உபுண்டு 
வழியாகத் தரலாம் என யோசித்து செயற்படுத்த முடியும். நம்மால் ஆனது இப்போதைக்கு இதுதான்.  

குறுகிய காலத்தில் உபுண்டுவின் அபரிமிதமான வளர்ச்சியின் ஒரு எதிர் விளைவு பல்வேறு நிர்வாக 
ஒருங்கிணைப்பு விடயங்களில் இன்னும் தெளிவான வரையரைகளை வகுக்கப்படாது இருக்க ஒரு காரணம். கா
லத்தால் இவை சீரடையும் என நம்பலாம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list