[உபுண்டு_தமிழ்]பயிற்றுனர் முழுமையான முறையான பயிற்சிகள், மற்றும் மூடுள் தளம்

Abdul Haleem Sulaima Lebbe ahaleemsl at gmail.com
Thu Feb 14 16:34:58 GMT 2008


உபுண்டு தமிழ் குழுமத்தினருக்கு!

வணக்கம்!
கடந்த 2007 திசம்பர் 01,02 ஆம் திகதிகளில் இலங்கை தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையிலமைந்துள்ள (கல்முனயிலிருந்து 16 Km ) பிரயோக
விஞ்ஞான பீடத்தில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப்பட்டறையை எமது
பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடாத்தினோம்.
அதன் தொடர்கட்டமாக பாடசாலைகளின் ஆசிரியர்களிற்கு இது விடயமாக சில பயற்சி
வகுப்புகளை நடத்தலாமென நினைத்துள்ளோம். மேலும் கடந்த சில தினம்களின் முன் பல
பயிற்சி வகுப்புகளை எம் ஐ டி யில் நடந்ததாய் அறிந்தேன், மிக்க மகிழ்ச்சி.

மேலும், கடந்த மாதமளவில் ஓர் கணனி விற்பனைக்காட்சிக்கூடத்தில் உபுன்டுவின்
உத்தியோக பூர்வ கையேட்டினைப்பார்க்கக்கிடைத்தது. மேலும் அதனைப்பற்றி
அறியக்கிடைத்ததானது அதுவோர் Canonical Partnership திட்டத்தின் கீழான
பயிற்சிநெறியின் போது வழங்கியதாகவும் அறியக்கிடைத்தது.

இது விதமாக எமது பயிற்றுனர்களுக்கும் ஏதாவது முழுமையான முறையான பயிற்சிகள்
ஏதேனும் வழங்கப்படின் சிறப்பான முறையில் பயனாளர்களை எதிர்காலத்தில் திறன்பட
உருவாக்கக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன், இவ்வாறான வாய்ப்புகள் ஏதும்
உண்டா?

மற்றும் அடுத்ததாக எமது பயிற்சி பட்டறையின் பின்னரான கருத்துக்களினடிப்படையில்
எதிர் கால பயிற்சி பட்டறைகளில் தமிழில் கையேடுகள் வழங்குதல் மிகவும் பிரயோசனமாக
அமையும், குறைந்தது அதன் Introduction ஆவது கையேடாகக்கொடுக்கப்படின் நன்மையாய்
அமையும் என நினைக்கிறேன்.

மேலும், இது தொடர்பாக ராமதாசுடனும் கதைத்தேன், மேலும் இதனை விரிவுபடுத்தும்
முகமாக மூடூளினாலான கற்றல் நிர்வகிப்பு இனையத்தளத்தினையும் தொடங்களாம் என
கருத்துப்பரிமாறிக்கொண்டோம். இதன் மூலம் சர்வதேச ரீதியில் பலரும்
அனுகிப்பயனடைவர் என நினைக்கிறேன்.

இது தொடர்பான தாங்களனைவரினதும் கருத்துக்களை தெரிவிக்குமாறு
வேன்டிக்கொள்கிறேன்.

நன்றி
அப்துல் ஹலீம்.

-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080214/be072d5f/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list