[உபுண்டு_தமிழ்]பயிற்றுனர் முழுமையான முறையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் தளம்

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Feb 15 06:53:55 GMT 2008


On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote:
> மேலும் இதனை விரிவுபடுத்தும்
> முகமாக மூடூளினாலான கற்றல் நிர்வகிப்பு இனையத்தளத்தினையும் தொடங்களாம் என
> கருத்துப்பரிமாறிக்கொண்டோம். இதன் மூலம் சர்வதேச ரீதியில் பலரும்
> அனுகிப்பயனடைவர் என நினைக்கிறேன்.

ஏற்கனவே உபுண்டு கையேட்டின் தமிழாக்கம் பாதி கிணறு தாண்டிய நிலையில் இருக்கின்றது.  

இதைத் தவிர நிறுவற் கையேடுகள் உபுண்டு தருக்கத் தளத்திலும் (thamizh.ubuntuforums.org),  
http://www.ubuntu-tam.org/avanam/ubuntu/  கிடைக்கப்பெறுகின்றன.

இவற்றை வரும் 23, 24 தேதிகளில் நடைபெறவிருக்கும் பயிற்சி வகுப்பின் பொருட்டு செம்மைப்படுத்தி 
பயன்படுத்த உத்தேசம். ubuntu-tam.org க்கு கீழ் ஒரு மூடுல் தளத்தினையும் கொண்டு வரலாம். அதில் 
விவரங்களை பாட நடையில் சேர்த்து பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யலாம்.  இதனைத் தங்கள் கல்லூரி மா
ணாக்கருக்கு தெரியப் படுத்தி ஒருத் திட்டமாக செய்ய முடியுமா எனக் கேளுங்கள்!

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list