[உபுண்டு_தமிழ்] [FreeTamilComputing] Anybody tried remastering ubuntu 7.10

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Apr 23 13:39:23 BST 2008


2008/4/23 Muguntharaj Subramanian <mugunth at gmail.com>:

> வணக்கம்,
> தமிழ் சார்ந்த பொதிகளை ஒருங்கிணைக்க தனியாக ஒரு உபுண்டு சார்ந்த ஒரு லினக்ஸ்
> வெளியீட்டை கொண்டுவர முயற்சி செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன்.
>
> அத்தகைய முயற்சியிலு யாரும் ஈடுபட்டுள்ளீர்களா? உங்கள் கருத்துக்களை
> தெரியபடுத்துங்கள்.
>


முகுந்த் இது சாத்தியமே! uck.sourceforge.net இதனை சுலபமாக செய்து
கொடுத்துவிடும்.

இதற்குள் புகும் முன் ஆக வேண்டிய பல பணிகள் உள்ளன.   தரமான மொழிபெயர்ப்பு.
ஆவணமாக்கம். இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

கே பணிச்சூழல் தமிழாக்கத்திற்கு பொறுப்பெடுத்து செய்து வரும் எமது அனுமாத்தின்
படி கே பணிச் சூழலின் 4.4 க்கு (இன்னும் குறைந்தது பதினெட்டு மாதங்கள்) இத்தகைய
முழுமையான தமிழ் குபுண்டுவினை தர இயலும் எனும் நம்பிக்கை உள்ளது. இதற்கு எமக்கு
இப்போது கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து கிட்ட வேண்டும். கிடைக்கும் என
நம்புகிறேன். இது கே பணிச்சூழலுக்கானது.

நிற்க.

குநோம் பணிச் சூழலுக்கான தமிழாக்கத்திற்கு ஜயராதா பெலிக்ஸ் உடன் தி வாசுதேவனும்
பொறுப்பு வகிக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்ற சிறு பொறியாளர் குழு ஒன்று
தயாராக இருப்பின் இதையும் கே பணிச்சூழலின் தமிழாக்க வெளியீடு போல் கொண்டு வர
இயலும்.

தீர்க்கமான திட்டமிடல் இதற்கு மிக மிக மிக அவசியம்.  தாங்கிப் பிடிக்க ஒரு சிறு
குழுவும் சுற்றி பங்களிக்கும் பெரிய தன்னார்வலர் குமுகமுமே கட்டற்ற மென்பொருட்
திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படை.  தாங்கிப் பிடிக்கும் இக்குழுவிலிருப்போர்
அதிக நேரம் ஈடுபடுவது அவசியம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080423/9cc91969/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list