[உபுண்டு_தமிழ்]குனு அறம் - முதற் பகுதி - நிறைவை நோக்கி...

Sethu skhome at gmail.com
Wed Oct 3 08:02:57 BST 2007


மயூரன் >
//ஓர் அரும் பணியினை சத்தம் போடாம் செய்துகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்//

ஆம். ஆமாச்சுவின் பணி மிகவும் போற்றப்பட வேண்டியது. எனது பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும்.

மேலோட்டமாக நேற்றிரவு சில பக்கங்களைப் பார்த்தேன். தமிழ் மொழிப்பாவனைகள்
அநேகமாக சிறப்பாகவே உள்ளன.
ஒரு கலைச் சொல் பற்றியும் சில எழுத்துப்பெயர்ப்புக்கள் பற்றியும இதிலும்
பின்னரும் எழுதுகிறேன்.

ஆமாச்சு>
//அவசியம் அறியத் தரவும்..patent மாதிரி சொற்கள் சில மாற்றப் பட வேண்டியுள்ளது..//

ஆம். CopyLeft என்பதற்கு எழுத்துப்பெயர்ப்பக்குப் பதில் "அளிப்புரிமை"
எனலாம். விக்சனரிக்கு அக் கலைச்சொல்லை சேர்த்தவர் மயூரன் எனத் தெரிந்தது.
நல்ல வார்த்தை.

அதற்கான தங்கள்  எழுத்துப்பெயர்பபு ஒரு பக்கத்தில் "காப்பிலெஃப்ட்"
எனவும் இன்னொரு பக்கத்தில் "காப்பிலெப்ஃ்ட்" எனவும உள்ளன.

f அல்லது அதன் இதர உயிர்மெய்களை எழுத்துப்பெயர்க்க மரபிலக்கணங்களில்
இல்லாத ஆனால் நாம் சகித்துக்கொள்ளும்  அம்முறையில் ஆய்தம் ப் அல்லது அதன்
உயிர்மெய்க்கு முன் (அதாவது இடப்பக்கம்) வரல் வேண்டும். எனவே
மேறகாட்டியதில் முதலாவது சரி இரண்டாவது தவறு.

வேறு சில அத்தகையச் சொற்களிலும் வலப்பக்கம்   ஆய்தம் இடப்பட்டுள்ள
வழுக்கள் தெரிந்தன. பின்னர் எழுதுகிறேன்.

 அடுத்து http://www.gnu.org/home.ta.shtml என்பதில் உள்ள பினவரும் வசனம் பற்றி:

//"குனு யுனிக்ஸல்ல " என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். குஹ்-நூ என
இது உச்சரிக்கப் படுகிறது.//

அதன் ஆங்கில மூலம்:
//GNU is a recursive acronym for "GNU's Not Unix"; it is pronounced
guh-noo, approximately like canoe.//

guh-noo என்ற பலுக்கல் வழிகாட்டி  குஹ்-நூ அல்ல என்ற எனது அறிதலை
ஆதாரங்களுடன் சில நாட்களுட்குள் எழுதுவேன். சரியான பலுக்கல் எது எனவொரு
தீர்மானத்துக்கு வர முடியுமேயானாலும் இத்தகைய வசனத்தை மொழிபெயர்த்தல்
எனபதே மிகச்சிக்கலான விடயம் தான். ஆங்கிலத்தில் "paradoxical" எனப்படுவது
போல. அதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டிய விடயங்களையும் எழுதவுள்ளேன்.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list