[உபுண்டு_தமிழ்]அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sun Mar 11 15:07:06 GMT 2007


On 3/11/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> ராமதாஸ்,
>
> மிகப் பிரயோசனமான பணியொன்றில் இறங்கியிருக்கிறீர்கள்.
> நீங்கள் ஏன் வலைபப்திவொன்றை ஆரம்பித்து இந்த கட்டுரைகளை அங்கே தரக்கூடாது?
>
க்னூ வலைத்தளத்தை மொழிபெயர்ப்ப்[அதற்கான அனுமதிகளும் வசதிகளும் உண்டு. ஆனால்
> அதை எப்படி முறையாக செய்வது என்பதை தேடவில்லை. அதை கொஞ்சம் பார்த்திகிர்களானால்
> படிப்படியாக க்னூ வலைத்தளத்தின் தமிழ் தளம் ஒன்றினை ஆக்கிக்கொள்ளலாம்.


ஹர்ட் கெர்னல் முதலிய விஷயங்களையெல்லாம் கருத்தில் கொண்டு கடந்த நவம்பர் மாதமே
சவன்னாஹ் வில் குனு இணைய தள தமிழாக்கத்திற்கு விண்ணப்பித்திருந்தோம்.

https://savannah.gnu.org/projects/wwwta/

அனுமதியும் கிடைத்தது.  விரைவில் இவ்விறு கோப்புகளையும் பதிவேற்றம் செய்ய w3c
தரத்துக்கு ஏற்புடைய html கோப்பாகச் செய்து அனுப்ப வேண்டும். அதன் பின்னர்
பதிவேற்றுவதற்கான சி.வி.எஸ் உரிமம் வழங்கப் படும்.

விரைவில் இவ்விரண்டு கட்டுரைகளையும் குனு இணைய தளத்தில் எதிர்பார்க்கலாம்.

வலைப்பதிவு இருக்கிறது பராமரிப்புக்கு அதிக நேரம் வேண்டியிருக்கிற படியால்
அதனைத் தவிர்த்து உபுண்டு தமிழ் குழும விகியிலேயே தொடர்ந்து இவற்றை இட்டு
வருகிறேன். நிறையுடைய பிறதர்மத்தினைக் காட்டிலும் குறையுடைய சுய தர்மம் பேணுவது
சிறந்தது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் கேடீயிக்கான பணியில் தற்போது தான்
காலடி எடுத்து வைத்துள்ளேன்.

கேடீயீ தமிழாக்கத்தில் தற்சமயம் கவனம் கொடுக்க வேண்டியிருகிறது. இது
குபுண்டுவிற்கு போய் சேறுமே! அதனோடு சேர்ந்து உதவிக் கோப்புகளையும் தமிழாக்கம்
செய்ய வேண்டும். பெரிய பணிதான்.

இவ்விரண்டும் தான் தற்போதைய பிரதான கவனம்.


உங்கள் பெறுமதியான மொழிபெயர்ப்புப் பணிக்கு பாராட்டுக்கள்.
>
விக்கிபீடியா பக்கம் அப்புறம் காணவே இல்லையே?
>
வாருங்களேன்


பொதுவான விஷயங்களை தமிழாக்கம் செய்யும் போது நிச்சயம் அவற்றை விகிபீடியாவில்
இடுகின்றேன். :-)

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070311/5e98dba0/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list