[உபுண்டு_தமிழ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..
Sethu
skhome at gmail.com
Tue Jun 26 11:18:56 BST 2007
ஆமாச்சு எனக்கு எழுத்திய பதிலுக்கு என் பதில் இப்போது இக் குழுமத்துக்கு
அனுப்புகிறேன்
~சேது
---------- Forwarded message ----------
From: Sethu <skhome at gmail.com>
Date: Jun 26, 2007 12:55 PM
Subject: Re: [உபுண்டு_தமிழ்]தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..
To: amachu at ubuntu.com
On 6/26/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> நினைவில் இருக்கிறது. ஆனால் ரெமிங்க்டனும் இன்னும் இயல்பாக இதில் சேர்க்கப் படவில்லை. கஸ்டியில்
> வரலாமோ என்னவோ.
வரவேண்டுமாயின் இப்போதே உபுண்டுகாரர்களிடிம் (அந்த பொதியை
பராமரிப்பவர்களிடம்) கதவைத் தட்டி சொல்ல வேண்டும். முதலில் கட்ஸிக்கான
பொதிகளில் ஏறகனவே உள்ளிடப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து இல்லாவிடில்
ஒரு bug report மூலம் வேண்டுகோளை முன்வைக்கலாம்தானே?. தாங்கள் அப் பணியை
செய்யலாமே (தமிழ் லோகோ குழு தலமை என்ற அடிப்படையில்) ? இப்போது சரியான
தருணம, காலா தாமதிக்க வேண்டாம்.்
>
> சமீபத்தில் தமிழ்99 க்கான கோப்புகளை cdac சுதாகர் ஸ்கிம் மடலாடரற் குழுவுக்கு அனுப்பியதை
> பார்க்க நேரிட்டது.
>
சுட்டிக் காட்டியதற்கு்ற்கு நன்றி. தேடியதில் scim-devel குழுமத்துக்கு
போன வாரம் (june 19) அனுப்பி இருக்கிறார் என்பது கண்டேன். உடனடியாக
பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அதில் தமிழ்99 அடிப்படை விசைப் பலகைக்கான
குறியீடுகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டுளளன. விசையடிகளுக்கான ஏனைய
சட்டத்திட்டங்கள் (4 முதல்்ல் 11 வரை - உ-ம்: வல்லின மெல்லின
இணைகளுக்கான விசேட அமைப்புக்கள்) கடைப்பிடிக்கப் படவில்லை.
தமிழ்99 இன் அடிப்படை வடிவமைப்புக்கு மட்டும் ஒருவர் விசைப் பலகை முன்
வைப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அதற்கு நியமத்தின் பெயரையே சூட்டுவது
என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேறு பெயரை வைத்து இது தமிழ் 99
அடிப்படையில் செய்யப்பட்டது என்றும் அத்துடன் நியமத்திலிருந்து எவ்வாறு
வேறுபட்டுள்ளது என்று மேலதிகமாக விசையமைபாளர்கள் எடுத்துக் கூற வேண்டும்.
தமிழ் 99 ஒன்றுதான் அரசாணை ஒன்றின் மூலம் கட்டுப்படவேண்டிய பலகை
அமைப்பும் விசையடிகளும் என்னென்னவென வரைவிலக்கணம் செய்யப்பட்ட நியமம்
ஆகும். ஆளாளுக்கு அதில் சில பகுதிகளுக்கு மட்டும் அமைத்து விட்டு இதுதான்
தமிழ்99 என்பது போல வெளியிடுவது எவ்வாறு ஏற்றுக்கொள்ளவது? புது பயனர்கள்
எது உண்மையான தமிழ்99 என்று தெரியாமல் மேலும் குழப்பமடைவார்கள்.
நியம்மொன்றை எப்படியும் பாவிக்கலாம் என்றால் அந் நியம் அர்த்தமொன்றும்
இல்லாது போய்விடும்.
திரு சுதாகர், திரு. ஜென்ஸ் பீட்ற்றசன், நண்பர் ஃபேலிக்ஸ் ஆகியோருக்கு
ஒரு மடலில் இவற்றை சுட்டிக் காட்டவுள்ளேன்.
> m17n-contrib சரியாக செயல்பட தபுண்டுவின் உள் இருக்கும் வேறு பொதிகள் நிறுவப் பட வேண்டு
> மா? m17n, libm17n, libanthy & m17n-contrib ??
கட்டாயம். m17n-contrib விசைப்பலகைகள் மட்டுமே. ஏனையவைகள் அடிப்படை
engine கள். மேலும் m17n-db க்கும் இருக்குமே?. (வீட்டில் பார்த்து
பின்னர் எழுதுகிறேன்)
> > > கூடிய சீக்கிரம் இந்த பொனடிக்கு முக்காடு போடணுங்கோ! இது நல்லதில்ல...
> >
> > ஏன் நல்லதில்லை ?
>
> இது முதலில் தமிழ் வசதிக்கு நீங்க ரொம்ப சிரமப் பட வேண்டாம். இங்கிலீஷ் கீ போட்ர்லேயே செய்து
> க்களாம். பாருங்க ammA - அம்மா!
ஆம். நான் பாவிப்பது எல்லாம் ஆங்கில் பொனடிக் தான் ஆவரங்கால், எ-கலப்பை..
> இப்படி மக்களை கொஞ்சம் இந்தப் பக்கம் திருப்பத் தான் பயன்படலாம். மெனுக்களில் செயல்களை எல்லாம் செ
> ய்ய shortcut keys (?) பயன்படுத்தறோமே! அங்கே இவைகளை எப்படிக் கையாள்வது?
எந்த shortcut keys - விவரிக்க முடியுமா?
> பழகினா
> அதிக விரைவாக தட்டெழுத பயன்படுவதென்னவோ தமிழ்99 தான். கொஞ்சம் காலம் பயிற்சி தேவை
> அவ்வளவே!
>
1999 யிலிருந்து பல தமிழ் கணினி வல்லுனர்களும் பரிந்துரைத்தது
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தமிழ்99 பாவணையத்தான் ஊக்குவிக்க வேண்டும்
ஏனைய இடங்களில் பொனடிக் பாவிக்காலாம் ஆனால் தட்டச்சு முறைகளை கைவிட்டு
விடவேண்டும் என்று. ஆயினும் தற்காலத்தில் நடப்பது என்ன?
இலங்கையில் 2004 இல் முத்து நெடுமாறனே இங்கு வந்து செமினாரெலாம் நடத்தி
(மயூரனும் அவற்றிற்கு உதவினார்) எங்கள் அரச தகவல் தொழினுட்பத்திற்கான
icta நிறுவனம் இதுதான் இலங்கையில் தமிழ் உள்ளிட விசைப்பலகை என தமிழ் 99
இன் அடிப்படை விசையமைப்புக்களை மட்டும் (ஏனைய சட்டதிட்டங்களை
உள்ளடக்கவில்லை) கணினித் துறைக்கு முன் வைத்தனர. பின்னர் அரச
நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர் பலர் இது கடினமானது எங்களுக்கு
தட்டச்சு முறையே வேண்டும் ்என்று என சொல்லி விட்டர்களாம். அதனால் சென்ற 2
வருடன்களாக icta 2004 இல் அறிமுகம் செய்ததை கிடப்பில் போட்டுவிட்டு
தற்போது லினக்சு தளங்களுக்கு ரெங்கநாதன் தட்டச்சு விசைபலகையை
எழுதவுள்ளார்கள். (அது பாமினி போன்றதுதான்)
தமிழகத்திலோ ரெமிங்டன், புதிய தட்டச்சு, பாமினி என scim-table, m17n,
தமிழ் விசை முறைமகளில் போன வருடத்தில் இருந்து வரத் தொடங்கி விட்டன.
freetamilcomputing குழுமத்தில் தமிழ் விசை ஆக்கும் நண்பர்கள் தமிழ்
தட்டச்சு கற்று விட்டு கணினி பாவணைக்கு வருவோரே அதிகம் என்பதால் தட்டச்சு
முறைகளும் வேண்டும் என எடுத்துச் சொன்னார்கள்.
தட்டச்சு முறைகளில் பல வழுக்கள் இலகுவாக ஏற்பட முடியும். அதற்கான
காரணிகளை நான் ஒரு வலைப்பதிவில் எழ்தவுள்ளேன் - எழுத்தித்தான் ஆக
வேண்டும். (இல்லாவிடில் நான் தண்ணீரில் கண்ணீர் விடும் மீனாகவே
இருந்துவிட்டிருவேன்)்
~சேது ்
More information about the Ubuntu-l10n-tam
mailing list