[உபுண்டு_தமிழ்]இது ரொம்ப முக்கியம் சாமியோஓஒ!

K. Sethu skhome at gmail.com
Sat Jun 23 21:42:38 BST 2007


On 06/23/2007 02:39 PM, Tirumurti Vasudevan wrote:
>> On 6/23/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>>     
>>> //இப்போது scim வேலை செய்வதில்லை. (சரிதானா?)//
>>>
>>> ஏன்?
>>>
>>> புரியவில்லையே
>>>
>>> உபுண்டு சூழலில் வேலை செய்கிறது.
>>>       
>
> உபுண்டு சூழலில் தமிழ் மொழி சூழல் மொழியாக (language setting) உள்ளபோது
> (பல பட்டிகளும் தமிழில் தெரியும் அல்லவா?) scim வேலை செய்கிறதா? எண்
> கணினியில் இல்லை.
>
>
> On 6/23/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>   
>> ஆ...
>> புரிந்துவிட்டது.
>>
>> உபுண்டு சூழலானால் எல்லா தமிழ் வாதிகளையும் இரட்டைச் சொடுக்கலில் நிறுவ
>> தபுண்டுவை பயன்படுத்தலாம்.
>> 64 bit, குபுண்டு போன்றவற்றுக்கு இன்னமும் தபுண்டுவின் ஆதரவு இல்லை.
>> விரைவில் குபுண்டுவுக்கு ஆதரவு வழங்க எண்ணம். 64 bit இற்கு இப்போதைக்கு இல்லை
>>     
>
> 64 bit க்கு எப்போதோ இசைவு  செய்து நிறுவியாகி விட்டது.
>
> திவே
>
>   

திவே

"இசைவு செய்து" என்றால் என்ன?

scim வேலை செய்யாதது தங்கள் 32 பிட் தளத்திலா அல்லது 64 bit தளத்திலா? 

நான் 64 bit இதுவரை நிறுவியதில்லை. எனது தற்போதைய கணினியில் முடியும் ஆனால் 
இவ்வாரயிறுதியில் நேரம் கிடைக்காது

32 bit இல்உபுண்டு எட்ஜி மற்றும் பைஸ்டிகளில் gnome , kde மேசைத் தளங்களில் ஆங்கிலச் 
சூழலிலும் தமிழ்  சூழலிலும்  scim  இயக்குவதில் எனக்குப் பிரச்சினைகள் இல்லை. 

தமிழ் சூழலைப் பொருத்தவரையில் வேறு பிரச்சினைகள் kde சூழலில் கூடுதலாக உள்ளன.  
gnome இல் விட குறைவான எழுத்துருக்களே சரியாக உறுப்பெறுதல்,  இலகுவில்  crash ஆதல் 
, தொடங்குவது மிக மெதுவாக, desktop menus மிகவும் குழப்பகரமாக புதிய 
பயனர்களுக்கு unfriendly ஆக இருத்தல். இக் காரணங்களுக்காக புதிய தமிழ்ச்சூழல் 
பயனர்களுக்கு gnome சூழலே பொருத்தமானது என்பதே என் பரிந்துரைப்பு.

~சேது



   



More information about the Ubuntu-l10n-tam mailing list