[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் - தமிழாக்கம்..

K. Sethu skhome at gmail.com
Sun Jun 3 03:21:08 BST 2007


On 06/03/2007 06:21 AM, ஆமாச்சு wrote:
> தங்கள் கருத்துக்களுக்கு நன்றி..
>  
> On 6/2/07, *K. Sethu* <skhome at gmail.com <mailto:skhome at gmail.com>> wrote:
>
>     >>
>
>
[..]
>
>
>     skim / scim க்கான (panel) பட்டையை tray இல் வைப்பதா  அல்லது floating ஆக
>     விடுவதா என்பதை தேர்வு செய்யத்தானே இது. இங்கு Toggle பெயர்ச் சொல் எனில்
>     "சுழற்றி" ,
>     வினையெனில் "சுழற்றல்" எனலாமோ?  (Toggling என்பதற்கு மாற்றுதல் என்பதை விட
>     சுழற்றுதல்
>     தான் பொருத்தம் கூட எனச் சுட்டிட்காட்டியது விடுமுறைக்காக uk விலிருந்து
>     வந்துள்ள எனது
>     அண்ணன் - அவருக்கு நன்றி)
>
>
>
> toggling பயன்படுத்திய வகையில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது.. On-Off , 
> Start-Stop போன்று.. இடை மாற்றம்... சரியாக இருக்குமா..
>
toggle என்பது ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு 
மாற்ற ஒரு முறையான அமைப்பு எனலாம். உதாரணமாக A,B,C,D,E என்ற வரிசையில் தேர்வு 
செய்யக் கூடியதாயிருப்பின்  நிலை  A இலிருந்து  நிலை E க்கு அடுத்தடுத்து 4 முறை 
toggle க்கான விசையை அமுக்க வேண்டும் (A->B->C->D->E என்ற வரிசையில்)  D இலிருந்து 
B அடைய D->E->A->B, 3 முறை toggle செய்ய வேண்டும். அதாவது toggle என்பது  ஒரு 
திசையில் மற்றும் சுழற்றக் கூடிய முறை!
>
>     >>
>     #: plugins/scimlauncher/skimplugin_scim.desktop:1
>     msgid "Name=SCIM Server"
>     msgstr "பெயர்=ஸ்கிம் வள்ளல்"
>     <<
>     skim = ஸ்கிம் என்பது சரி. scim என்பதை நான் உச்சரிப்பது
>     "சிம்"  (இதில்  நான்  "சி"
>     யை  ஸ்  இன்  முற்றியலிகரமாகவே  உச்சரிப்பேன். அதாவது "ஸிம்"  என்பது போல).
>     உருவாக்கியோர் எப்படி  உச்சரிக்க  வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க
>     வேண்டும்.
>
>
> இதை நானும் யோசிச்சேன்.. SKIM - ஸ்கேம் எனவும் SCIM - ஸ்கிம் எனவும் வழங்கலாமா.. கே 
> - கேடீயீ..
>
>
"SKIM - ஸ்கேம்" -  இது  சற்றும் பொருத்தமில்லாதது. ஸ்கேம் என்பது ஆங்கிலத்தில் scam, 
skame, scame போன்றல்லவா இருக்கும்.

SCIM என்பதை முதலில் அவர்கள் ஆக்கியது (Smart Common Input Method) என்பதின் 
சுருக்கமாக. scim இலும் அதன் பின்னர் ஆக்கிய skim இலும் c, k என்பன  ஒரே மாதிரிதான் 
உச்சரிக்க வேண்டும் என ஆக்கியோர் எண்ணியிருக்க மாட்டார்கள். skim என்பதற்கு ஸ்கிம் அல்லது 
ஸ்கைம் (அமெரிக்கர்கள் i க்கு இகரத்தை விட கூடுதலாக ஐகாரத்தைப் பயன் படுத்துவர்) 
என்றிருக்கலாம். எனவே scim என்பதில் அவர்கள் எண்ணியிருப்பது சிம் (உச்சரிப்பில் ஸிம் க்கு 
சமன்) ஆகத்தான் இருக்கும் என்பது எனது ஊகம். தாங்கள் scim-user குழுமத்திற்கு scim, 
skim உச்சரிப்புக்களில் வேறுபாடு என்ன எனக் கேட்கலாமே?
   
மொழிபெயர்ப்பு முயற்சிகளை வரவேற்று பாராட்டுகையில் இவற்றை  விகசனரி  மூலம்  
கலந்துரையாடினால் கூடுதலானோர் பங்கு கொள்வார்கள்

~சேது  



More information about the Ubuntu-l10n-tam mailing list