[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் - தமிழாக்கம்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Jun 3 01:51:29 BST 2007


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி..

On 6/2/07, K. Sethu <skhome at gmail.com> wrote:
>
> >>
> #: src/skim.desktop:2
> msgid "Comment=Input method platform"
> msgstr "குறிப்பு=உள்ளீட்டு முறைக்கான ப்ளாட்பார்ம்"
> <<
>
> உள்ளீட்டு முறைமை அடித்தளம் எனலாம்.இது செயலியிலில் எந்த கன்டெக்ஸ்டில் பயன்படுத்தப் படுகிறது என்பதில் தெளிவு
இல்லாது போகவே அப்படியே பயன்படுத்தியிருந்தேன். அடித்தளம் பொருந்தும் என்றால்
அங்ஙனம் மாற்றிவிடலாம்.


>>
> #: src/skimplugin.desktop:2
> msgid "Comment=A Skim Plugin"
> msgstr "குறிப்பு=ஒரு ஸ்கிம் சொருகி"
> <<
>
> "சொருகி" எனச் சொல்கையில் அது சொருகலை செய்யும் கருவியை குறிப்பது போலுள்ளது.
> இங்கு
> Plugin என்பது சொருகப்படும் பொருளைத்தான் குறிக்கிறது. எனவே "சொருகல்" எனச்
> சொல்லலாமா?
> >>ஸ்கிமுக்கான சொருகு பொதி... அல்லது ஸ்கிமுக்கான சொருகல்...

அது சரி... பயர்பாக்ஸில் add-on என்று வழங்குகிறார்களே.. plug-in க்கு
இதற்கும் என்ன வேறுபாடு?#: src/skimsetupcategory.desktop:2
> msgid "Comment=A definition of one Skim Setup Category"
> msgstr "குறிப்பு=ஸ்கிமினுடைய அமைப்பு வகை குறித்த விளக்கம்"
> <<
> ஆங்கிலத்தில் "one" எனற பதத்தை "Skim Setup Category" முன் போட்டுள்ளது
> எதற்கு
> என்பதறிய skim பாவித்து பார்த்து என் கருத்தைச் சொல்கிறேன்.
>
> அனால் definition என்பதற்கு "விளக்கம்" என்பதை விட "வரையறை" என்பதே சிறந்தது
> என
> நினைக்கிறேன். பல அகராதிகளிலும் உள்ள "வரையறை" பழக்கத்தில் உள்ளதுதானே?வரையறை பொருத்தமாகத் தோன்றுகிறது...

definition, explanation, description, brief, summarize இவைகளை எவ்வாறு
வேறுபடுத்துவது?


#: plugins/mainwindow/skimplugin_mainwindow_config.desktop:1
> msgid "Name=Main Toolbar"
> msgstr "பெயர்=பிரதானக் கருவிப் பெட்டி"
> <<
> >>
> #: plugins/mainwindow/skimplugin_mainwindow.desktop:2
> msgid "Comment=Main Window"
> msgstr "குறிப்பு=முதன்மைச் சாளரம்"
> <<
>
> ta.po கோப்பினுள் போல Main Toolbar ஐ "முதன்மைக் கருவிப்பட்டை" என்றே
> மொழிப்பெயருங்கள்.சரி.. Panel - என்பதற்கு தங்களின் பரிந்துரைத் தாருங்கள்...>>
> #: plugins/mainwindow/skimplugin_mainwindow.desktop:1
> msgid "Name=Toggle Docking"
> msgstr "பெயர்=டாக்கிங் மாற்றம்"
> <<
>
> "Docking" - இங்கு விண்வெளி கலன்கள் ( spacecrafts ) docking என்பதில் போல
> இது
> குறிப்பிடும் பொருளை இன்னொன்றுடன் இணைப்பதைக் குறிக்கிறது என நினக்கிறேன்?
> "டாக்கிங்"
> என ஒலிப்பெயர்ப்புக்குப் பதிலாக மொழிபெயர்ப்பு ஒன்று செய்ய வேண்டும். தற்கால
> அகராதி
> ஒன்றில் இணைத்தல் என்றே உள்ளது.
>
> skim / scim க்கான (panel) பட்டையை tray இல் வைப்பதா அல்லது floating ஆக
> விடுவதா என்பதை தேர்வு செய்யத்தானே இது. இங்கு Toggle பெயர்ச் சொல் எனில்
> "சுழற்றி" ,
> வினையெனில் "சுழற்றல்" எனலாமோ? (Toggling என்பதற்கு மாற்றுதல் என்பதை விட
> சுழற்றுதல்
> தான் பொருத்தம் கூட எனச் சுட்டிட்காட்டியது விடுமுறைக்காக uk விலிருந்து
> வந்துள்ள எனது
> அண்ணன் - அவருக்கு நன்றி)toggling பயன்படுத்திய வகையில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது.. On-Off ,
Start-Stop போன்று.. இடை மாற்றம்... சரியாக இருக்குமா..

docking - இதன் கன்டெக்ஸ்டில் குழப்பம் இருந்ததால் அப்படியே கொடுத்தேன்..
செயலியில் பயன்படுத்தும் இடமறிந்து அதற்கேற்றாற் போல் செய்ய வேண்டும்..
இணைத்தல் தான் இடத்திற்கு பொருந்தும் என்றால் அப்படியே ஆகட்டும்...


>>
> #: plugins/scimlauncher/skimplugin_scim.desktop:1
> msgid "Name=SCIM Server"
> msgstr "பெயர்=ஸ்கிம் வள்ளல்"
> <<
> skim = ஸ்கிம் என்பது சரி. scim என்பதை நான் உச்சரிப்பது
> "சிம்" (இதில் நான் "சி"
> யை ஸ் இன் முற்றியலிகரமாகவே உச்சரிப்பேன். அதாவது "ஸிம்" என்பது போல).
> உருவாக்கியோர் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்
> என்பதைப் பார்க்க
> வேண்டும்.


இதை நானும் யோசிச்சேன்.. SKIM - ஸ்கேம் எனவும் SCIM - ஸ்கிம் எனவும்
வழங்கலாமா.. கே - கேடீயீ..


Server / Client இவற்றிற்கு வள்ளல் / யாசகர் என மொழிபெயர்ப்பது ஆங்கிலத்தில்
> சொல்வார்களே "pompus" என, அப்படித்தான் தெரிகிறது. முன்னர் விக்னரி
> குழுமத்தில்
> முன்வைக்கப்பட்ட வழங்கி / வாங்கி என்பவைகள் பொருத்தமானவைகள் அத்துடன்
> போதுமானவைகள் என்பது
> எனது கருத்து.
ஆம்.. வழங்கி - வாங்கி தான் முன்னர் பயன்படுத்தி வந்தேன்.. வழங்கும் தன்மை
உள்ளோரை குறிக்க பிரத்யேகமாக குறிக்கும் சொல்தானே வள்ளல்.

வழங்குவதால் வழங்கி அல்லது வழங்குவதால் வள்ளல் இரண்டில் பொருத்தம் அதிகம் எதில்
உள்ளது என்றும் யோசித்தேன்...

நடுவே புரட்சித் தலைவரின் "வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்!" என்ற
பாட்டு வேற ஞாபகத்துக்கு வந்தது...

Web Server - இணைய (HTML) சேவைகள் வழங்குவதால் இணைய வள்ளல்... இணைய
வழங்கி...Apache Web Server
Application Server - செயலிகளுக்கான வள்ளல்... செயலிகள் வழங்கி... Tomcat
Application Server
Database Server - தரவுகளைத் தருவதால் தரவு வள்ளல்... தரவு வழங்கி..Oracle
Database Server

இப்படி இதன் பயன்பாடு நீள்கிறது.. மேலும் Client - பெறுநர், Clients -
பெறுவோர்..
வாங்கி.. வாங்கிகள்..

Client - Server Architecture? வாங்கி - வழங்கி கட்டமைப்பு அல்லது வள்ளல் -
பெறுநர் கட்டமைப்பு?

பயன்பாடு விரிவடையும் போது சற்று சிக்கல்கள் இருக்கின்றன... இதில் இன்னும்
கொஞ்சம் தெளிவு வேண்டும்...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070603/9d9ce405/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list