[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் - தமிழாக்கம்..

K. Sethu skhome at gmail.com
Sat Jun 2 06:37:56 BST 2007


On 05/29/2007 07:17 AM, ஆமாச்சு wrote:
> வணக்கம்,
>
> இத்துடன் skim desktop_ta.po இணைத்துள்ளேன்.
>
> நன்றி.
>
>   
மேலும் scim-user குழுமத்துக்கு அனுப்பியுள்ளதையும் அதற்கு Liu Cougar இன் பதிலையும் 
பார்த்தேன். பின்னர் அனுப்பிய ta.po என்ற மற்றையை கோபினை மேலிட்டளவில் பார்த்துள்ளேன்.

இந்த desktop_ ta.po கோப்பில் இருந்து உள்ளவைகள் சிலவற்றிற்கு எனது கருத்துக்கள் :

 >>
#: src/skim.desktop:2
msgid "Comment=Input method platform"
msgstr "குறிப்பு=உள்ளீட்டு முறைக்கான ப்ளாட்பார்ம்"
<<

உள்ளீட்டு முறைமை அடித்தளம் எனலாம்.

"ப்ளாட்பார்ம்" என ஒலிப்பெயர்ப்பாக விடுவதில் அவ்வளவு  உடன்பாடில்லை. (மேலும் platform 
ஐ பிளாட்பார்ம் அல்லது பிளாட்போம் என எழுத வேண்டும் - அவற்றில் "பி" என்பது "ப" வுடன் 
குற்றியல் இகரமினைவதைக் குறிப்பது - ஃபிரான்சு, பிரிட்டிசு என்பவற்றில் "பி" யில் 
இகரவொலி முற்றியல் அல்ல குற்றியல் என்பது போல. ப் என மெய்யுடன் ஆரம்பிப்பது மரபு 
இலக்கணங்களிலும், தற்காலங்களில் தமிழ் மொழி அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றே 
நினக்கிறேன் )


 >>
#: src/skimplugin.desktop:2
msgid "Comment=A Skim Plugin"
msgstr "குறிப்பு=ஒரு ஸ்கிம் சொருகி"
<<

"சொருகி" எனச் சொல்கையில் அது சொருகலை செய்யும் கருவியை குறிப்பது போலுள்ளது. இங்கு 
Plugin என்பது சொருகப்படும் பொருளைத்தான் குறிக்கிறது. எனவே "சொருகல்" எனச் சொல்லலாமா?
 >>
#: src/skimsetupcategory.desktop:2
msgid "Comment=A definition of one Skim Setup Category"
msgstr "குறிப்பு=ஸ்கிமினுடைய அமைப்பு வகை குறித்த விளக்கம்"
<<
ஆங்கிலத்தில் "one" எனற பதத்தை "Skim Setup Category" முன் போட்டுள்ளது எதற்கு 
என்பதறிய  skim பாவித்து பார்த்து என் கருத்தைச் சொல்கிறேன்.

அனால் definition என்பதற்கு "விளக்கம்" என்பதை விட "வரையறை" என்பதே சிறந்தது என 
நினைக்கிறேன். பல அகராதிகளிலும் உள்ள "வரையறை"  பழக்கத்தில் உள்ளதுதானே?
 
#: plugins/mainwindow/skimplugin_mainwindow_config.desktop:1
msgid "Name=Main Toolbar"
msgstr "பெயர்=பிரதானக் கருவிப் பெட்டி"
<<
 >>
#: plugins/mainwindow/skimplugin_mainwindow.desktop:2
msgid "Comment=Main Window"
msgstr "குறிப்பு=முதன்மைச் சாளரம்"
<<

ta.po கோப்பினுள் போல Main Toolbar ஐ "முதன்மைக் கருவிப்பட்டை" என்றே மொழிப்பெயருங்கள்.

 >>
#: plugins/mainwindow/skimplugin_mainwindow.desktop:1
msgid "Name=Toggle Docking"
msgstr "பெயர்=டாக்கிங் மாற்றம்"
<<

"Docking" - இங்கு விண்வெளி கலன்கள் (  spacecrafts ) docking  என்பதில் போல இது 
குறிப்பிடும் பொருளை  இன்னொன்றுடன் இணைப்பதைக் குறிக்கிறது என நினக்கிறேன்? "டாக்கிங்"  
என ஒலிப்பெயர்ப்புக்குப் பதிலாக மொழிபெயர்ப்பு ஒன்று செய்ய வேண்டும். தற்கால அகராதி 
ஒன்றில்  இணைத்தல் என்றே உள்ளது.

skim / scim க்கான (panel) பட்டையை tray இல் வைப்பதா  அல்லது floating ஆக 
விடுவதா என்பதை தேர்வு செய்யத்தானே இது. இங்கு Toggle பெயர்ச் சொல் எனில் "சுழற்றி" , 
வினையெனில் "சுழற்றல்" எனலாமோ?  (Toggling என்பதற்கு மாற்றுதல் என்பதை விட சுழற்றுதல் 
தான் பொருத்தம் கூட எனச் சுட்டிட்காட்டியது விடுமுறைக்காக uk விலிருந்து வந்துள்ள எனது 
அண்ணன் - அவருக்கு நன்றி)

 >>
#: plugins/scimlauncher/skimplugin_scim.desktop:1
msgid "Name=SCIM Server"
msgstr "பெயர்=ஸ்கிம் வள்ளல்"
<<
skim = ஸ்கிம் என்பது சரி. scim என்பதை நான் உச்சரிப்பது "சிம்"  (இதில்  நான்  "சி"  
யை  ஸ்  இன்  முற்றியலிகரமாகவே  உச்சரிப்பேன். அதாவது "ஸிம்"  என்பது போல). 
உருவாக்கியோர் எப்படி  உச்சரிக்க  வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க 
வேண்டும். அவர்கள் இரண்டிற்கும் ஸ்கிம்  என்ற உச்சரிப்பை வைத்திருக்க மாட்டார்கள் என  
நினைக்கிறேன். ஆங்கிலத்தில் sc எனத் தொடங்குபவை சில வார்த்தைகளில் c   ஆனது k போலவும் 
வேறு வார்த்தைகளில் k போல் அல்லாமலும் உச்ச்ரிக்கப்படுகின்றன. உதாரணங்கள் : school - 
ஸ்கூல் (அல்லது சுகூல்) என்பதில் k போல. scene  என்பதில்  உச்சரிப்பு  சீன் (ஸீன்) என்பதே.

Server / Client  இவற்றிற்கு வள்ளல் / யாசகர் என மொழிபெயர்ப்பது ஆங்கிலத்தில் 
சொல்வார்களே "pompus" என, அப்படித்தான் தெரிகிறது. முன்னர் விக்னரி குழுமத்தில் 
முன்வைக்கப்பட்ட வழங்கி / வாங்கி என்பவைகள் பொருத்தமானவைகள் அத்துடன் போதுமானவைகள் என்பது 
எனது கருத்து.

<<

இன்னும் இக் கோபினுள்ள பல மொழி / ஒலி பெயர்ப்புக்கள் பற்றி பின்னர்தொடர்வேன்.

~சேது





More information about the Ubuntu-l10n-tam mailing list