[உபுண்டு_தமிழ்][கருத்துக்கள்] "Re: ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?"
ஆமாச்ச
ஆமாச்ச
Tue Feb 20 19:29:23 GMT 2007
On Tue, 2007-02-20 at 20:15 +0530, மு.மயூரன் | M.Mauran wrote:
> சேது, ஆமாச்சு,
>
> 1.
>
> முன்னுரிமை கொடுத்து மொழிபெயர்க்கப்பட வேண்டியவை என்று ஸ்டால்மன்
> பரிந்துரைத்திருக்கும் கட்டுரைகள் எவை என அறிய ஆவல். அந்த பக்கத்தின்
> முகவரியை தரவும். நானும் சிலவற்றை மொழிபெயர்க்கலாம்.
நாம் தற்போது தமிழாக்கம் செய்து வரும் கோப்போடு
http://www.gnu.org/philosophy/not-ipr.html பக்கத்தினை தமிழாக்கம் செய்ய
பரிந்துரைக்கப் பட்டிருந்தது. இது மிகவும் அற்புதமான பக்கம். கொஞ்சம்
சட்டம் பேசுகிறது:-)
> 2.
>
> //எந்தவொரு ஆங்கிலச் சொல்லிற்கும் நேரடியாகச் சொல்லாக்குவதே நாள்பட
> நிலைக்கும்.//
>
> என்ற இராம கி இன் கருத்தோடு என்னால் உடன்பட முடியாது. இதற்கு வேறு பல
> அறிஞர்கள் வேறு வகையான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். கருத்துமோதல்
> நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இராம கி. நான் மிகவும் மதிக்கும்
> சொல்லாக்குநர். ஆனால் அவரது இந்த கருத்தை வேதவாக்காக எடுத்துக்கொள்ள
> தேவையில்லை.
>
ம்ம்ம்...
> 3.
>
> ஆங்கிலத்தில் free என்ற சொல்லை பயன்படுத்தப்போய்த்தான் ஏராளம்
> குழப்பங்கள் ஏற்பட்டது. ஸ்டால்மனும் ஊரூராய்ப்போய் ஒவ்வொரு பேச்சிலும்
> free என்றாக சும்மா என்று இல்லை. அது விடுதலையோடு சம்பந்தப்பட்டது என்று
> தலையாய் அடித்துக்கொள்கிறார். free என்பதன் அர்த்தம் பெரியது என்ற
> concept இனை விளங்கப்படுத்தவே அவருக்கு பேச்சில் கால்வாசி நேரம்
> தேவைப்படுகிறது. அவரது பேச்சுக்களை கேட்டிருந்தால் இது புரியும்.
>
ஆமாம்... freesoftware என்றாலே freeware ஆ... இப்படி கேட்பவர்களுக்கு
விளக்கமளிக்க எமக்கும் அதிக நேரம் பிடிக்கிறது...
> சுதந்திரம் என்ற சொல்லை பயன்படுத்த முடியாமைக்கு சில காரணங்கள் உண்டு.
> அதில் மிகவும் உணர்வுபூர்வமான காரணம் அது சமஸ்கிருத அடிச்சொல் என்பது.
>
கட்டற்ற என்பதிலும் எமக்கு பிரச்சனை இல்லை சுதந்திரம் என்பதைப்
பயன்படுத்துவதிலும் எமக்கு பிரச்சனை யில்லை.
குரு, உதரம், மங்கலம், ஞானம், சிசு, திராவிடம், உதயா, கபிலன் இப்படி
எண்ணற்ற வார்த்தைகளில் எது எம்மொழியிலிருந்து எம்மொழிக்கு போனது என்பதில்
பலரும் சர்ச்சை கொள்வதைப் பார்த்து சற்றே சலித்து விட்டது.
முன்பு ஒரு முறை மயூரன் சொல்லித் தான் இப்பதத்தினை பிரயோகப் படுத்தத்
துவங்கினேன்.
அன்புடன்,
ஆமாச்சு.
More information about the Ubuntu-l10n-tam
mailing list