[உபுண்டு_தமிழ்]கேடீயீ தமிழாக்கம்...

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Mon Feb 19 12:53:03 GMT 2007


help documents ஐ சொன்னேன்.

இந்த உதவி ஆவணங்களை மொழிபெயர்த்தால் அது நீண்ட கால நோக்கில் நிலையான
பலனைத்தரும்.
அத்தோடு இடைமுகப்பு மொழியாக்கத்தோடு ஒப்பிடும்போது, தமிழ் பயனர்களுக்கு கூடிய
நன்மையும் தரும்.
உதாரணமாக, நாம் முழுமையான தமிழ் இடைமுகப்பினை ஒரு நூறு தமிழ் கணினி
பயனர்களுக்கு கொடுப்போம். (ஆங்கில இடைமுகப்புக்கு மாற்றக்கூடிய வசதியுடன்).

அதில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் ஆங்கில இடைமுகப்புக்கு மாற்றி
வைத்துவிட்டுத்தான் கணினியை பயன்படுத்துவார்கள். ஏதோ இதண்டு நாட்களுக்கு தமிழ்
இடைமுகப்பினை வைத்திருக்கக்கூடும்.

அதே நூறு பேருக்கு தமிழில் அமைந்த help documents, manuals உடன் ஆங்கிலத்துக்கு
மாற்றும் வசதியையும் வைத்து கணினிகளைக்கொடுப்போம். 99 வீதத்திற்கும்
மேற்பட்டவர்கள் தமிழ் உதவி ஆவணங்களையே பார்வையிடுவார்கள். தமிழ் மூலம் வாசித்து
ஒவ்வொரு மென்பொருளையும் எப்படி இயக்குவது என்பது குறித்து அறிந்துகொள்ள
ஆசைப்படுவார்கள்.

இதுதான் வித்தியாசம்.
நாம் மிகக்குறைந்தளவான பேர்களே இந்த வேலைகளில் ஈடுபடுவதால், அதி கூடிய
முக்கியத்துவம் மிக்க பணிகளை முதலில் முன்னுரிமை கொடுத்து செய்வது பயன்மிக்கது.

இது என் தனிப்பட்ட கருத்து.
இடைமுக மொழியாக்காத்தில் அக்கறையோடு ஈடுபடும் தன்னார்வலர்களை எந்த விதத்திலும்
நான் உற்சாகம் குன்ற செய்ய முயலவில்லை.

நானும் இடை முக மொழியாக்கத்தில் பங்குபற்றுவேன்.

-மு.மயூரன்

On 2/19/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> dont understand
> tv
>
> On 2/19/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> >
> >
> > இடைமுகப்புக்கு கொடுக்கும் கவனத்திலும் பார்க்க மேலதிக கவனம்
> > கொடுக்கப்பட்டாலும் பரவாயில்லை.
> >
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070219/7fb7514c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list