[உபுண்டு_தமிழ்]Finally!

Sethu skhome at gmail.com
Thu Feb 15 08:40:03 GMT 2007


மயூரன் மற்றும் அனைவருக்கும்

தபுண்டு 6.10.2 யை உபுண்டு-எட்ஜி நிகழ்வட்டு (live cd) இயக்கத்தளத்தில்
நேற்றிரவு நான் சோதித்ததில் கண்டறிந்தவைகள்:

1. உத்தேசிக்கப்பட்ட பொதிகளை நிறுவ அத்தியாவசியச் சார்புகள்
(dependencies)  எல்லாம் உள்ளன.

2. ஏற்கனவே முன்னைய 6.10.1, 6.10.2-beta களில் போல பின்வரும் ஒரு வழு
அறிக்கை வருகிறது:

Setting up language-pack-gnome-ta-base (6.10+20061019) ...
 * Reloading GNOME Display Manager configuration...
* Changes will take effect when all current X sessions have ended.
invoke-rc.d: initscript gdm, action "reload" failed.

ஆனால் அதனால் பாதிப்புக்கள் இல்லை என்பதால் நிவர்த்தி எதுவும் அத்தியாவசியமில்லை.

3. OpenOffice இல் சிக்கல் எழுத்துருக்களுக்கு  SooriyanDotCom மை
தெரிவாக்க அமைக்கப்பட்டுள்ள முறையில் மாற்றங்கள் தேவை என கருதுகிறேன்.
காரணங்களையும், தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சினைகளயும் இன்னொரு மடலில்
விவரமாக பின்னர் எழுதுகிறேன்.

4. SooriyanDotCom, Bamini  எழுதுருக்களை சேர்க்கும் முறை மாற்ற
வேண்டியுள்ளது. பயனிக்கையில் காணக்கூடிய வழுவையும், மாற்று முறையையும்
இன்றிரவு எழுதுகிறேன்.

5. நிகழ்வட்டு இயக்கத்தில் முழு கணினியையும் மீள ஆரம்பிக்க முடியாது -
ctrl+alt+backspace அமுக்கி, மீள் புகுபதிகை செய்துதான் பார்க்க வேண்டும்
எல்லாம் சரியாக உள்ளதா என்பதைப் பார்க்க. அவ்வாறு செய்கையில், முன்னர்
பார்த்திராத வழு நிகழ்கிறது. புகுபதிகை செய்கையில் X யை தொடக்க
இயலாதுள்ளது என அறிவிப்பு வந்தது. ஆனால் Safe Terminal ஊடாக
புகுபதிகையிட்டு X-முனையத்தின் ஊடாக command mode இல் வழு அறிவிப்பு
கோப்பினுள் பார்கையில் /etc/X11/Xsession.d/75custom-scim_init என்ற
கோப்பை திறக்க முடியாமையே காரணம் என தெரிந்தது. ls -lah கட்டளை மூலம்
அக்கோப்பகத்தின் கோப்புகள் என்னென்னவென பார்க்கையில், இந்த திறக்க
முடியாத கோப்புக்கான அனுமதிகள் பின்வருமாறு இருந்தது:

-rwx------  1 root root  113 2007-02-14 22:51 75custom-scim_init

ஏனைய கோப்புக்கள் எல்லாம் -rw-r--r-- என்ற அனுமதிகளுடனே உள்ளன. எனது
வன்தட்டில் நிறுவியுள்ள எட்ஜி, டாப்பர் என்பவைகளில் பார்க்கையில் இந்த
Xsession.d யினுள் 75custom-scim_init உட்பட எல்லா கோப்புக்களும்
-rw-r--r-- என்ற அனுமதிகளுடனெயே உள்ளன. அதாவது Xsession.d யினுள்ளுள்ள
எல்லா இலக்கங்களுடன் ஆரம்பிக்கும் கோப்புக்களும் திறக்கப்பட செயலிக்க
அனுமதி (x) தேவையில்லை - இருப்பினும் பராவாயில்லை. ஆனால் கோப்பின்
உரிமையாளருக்கு (root) மட்டுமல்லாது யாவருக்கும் (group & others), r
(read) அனுமதியும் தேவை என்ற ஊகிப்புடன் நான் அந்த முனையத்தில் பின்வரும்
கட்டளை கொடுத்து அனுமதிகளை மாற்றினேன் -rw-r--r-- எனபதற்கு :

sudo chmod 644 /etc/X11/Xsession.d/75custom-scim_init

அதன்பின் மீண்டும் புகுபதிகை செய்கையில்  gnome  வழமை போல சரியாகத் தொடங்குகிறது.

எனவே பொதியிலும் 75custom-scim_init கோப்புக்கு -rwx------ என்ற
அனுமதிகளை -rw-r--r-- என மாற்றினால் இப்பிரச்சினை இருக்காது.

ஆயினும் பின்னர் இன்று காலை பழைய தபுண்டு 6.10.1 பொதியினுள் பார்த்த போது
அங்கும் -rwx------ என்ற அனுமதிகளே கொடுக்கப்பட்டிருந்திருக்கிறது. எனவே
ஒரு புது தெளிவின்மை என் மனதில் இப்போது. முன்னர் ஒரு போதும் கண்டிராத
பிரச்சினை இப்போது எப்படி உருவானது என்பதே அது. இதற்கு சில மீளாய்வுகளை
செய்ய உள்ளேன். எனினும் -rw-r--r-- என்ற அனுமதிகளுடன் மட்டும் அக்கோப்பை
நிறுவுவதே சரியான முறை. (ஏனைய எல்லா Xsession.d கோப்புக்கள் போல)

மேற்குறிப்பிட்ட 3) , 4) பற்றி விரைவில் எழுதுவேன்

~சேது

On 2/13/07, Sethu <skhome at gmail.com> wrote:
> On 2/13/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> > கடைசியாக ஒருவாறு i386 உபுண்டுவிற்கான தபுண்டு வினை முழுமைப்படுத்திவிட்டேன்.
> > இதோ பொதி.
> >
> > சேது ஒரே ஒரு முறை இதனை ubuntu live cd இல் சோதித்துப்பார்த்துவிடுங்கள்.
> >
> > சரியாக வேலை செய்யுமானால் இதுதான் முழுமையான பதிப்பு.
> > ராமதாஸ் இப்பொதியினை வழங்கியில் ஏற்றி வைத்துவிட்டு முகவரியை தந்தீர்களானால்
> > நல்லது.
> >
> > -மு.மயூரன்
>
> சரி. இன்றிரவு அல்லது நாளை சோத்தித்து எழுதுகிறேன்.
>   பொதியை திறந்து பார்க்கவில்லை இன்னமும். குபுண்டுவிற்கும் சேர்த்துச
> செய்துள்ளீர்களா?
>
> ~சேது
>


More information about the Ubuntu-l10n-tam mailing list