[உபுண்டு_தமிழ்]Finally!

Sethu skhome at gmail.com
Fri Feb 16 09:29:32 GMT 2007


நேற்றைய மடலில் நான் எழுதியது:

// 4. SooriyanDotCom, Bamini  எழுதுருக்களை சேர்க்கும் முறை மாற்ற
வேண்டியுள்ளது. பயனிக்கையில் காணக்கூடிய வழுவையும், மாற்று முறையையும்
இன்றிரவு எழுதுகிறேன். //

தபுண்டு 6.10.2 நிறுவிய பின் OOo-writer செயலியை ஆரம்பித்து settings இல்
வேறு மாற்றங்கள் ஏதும் செய்யாமல் scim மூலம் தமிழில் உள்ளிடத்
தொடங்குகையில் எழுத்துரு தேர்வு செய்யும் சிறு பெட்டியினுள்
பாவிக்கப்படும் எழுத்துரு SooriyanDotCom என தானாக மாறுகிறது. தமிழில்
உள்ளிடடும்போது சிக்கல் எழுத்துருக்களுக்கு தபுண்டுவின் தேர்வுக்கிணங்க
அவ்விதம் தானியக்கமாக மாறுவது சரியே.

ஆனால் வழு ஏதெனில் உள்ளிடப் பட்டவை சரியாக உருப்பெறாமை. இதில் பாருங்கள் :

http://i19.tinypic.com/47xta0x.png

முதல் குறளின் முதல் வரி அது. SooriyanDotCom இல் உருப்பெறாமல்
இருந்ததால் அதனை நகல்கள் எடுத்து Free Sans, Free Serif, Lohit Tamil
ஆகிய மூன்று எழுத்துருக்களில் காட்டுவதையும் அப் படத்தில் பார்க்கலாம்.
இதில் தெளிவாக நாம் அறியக்கூடியது SooriyanDotCom க்குப் பதில் Free Sans
தான் பாவிக்கப்பட்டுள்ளது. Free Sans வழக்கம் போல தவறான
உருப்பெற்றுள்ளது. ஏனைய இரு எழுத்துருக்களிலும் உள்ளிடல்கள் சரியான
உருக்கள் பெற்று காணப்படுகின்றன.

இவ் வழுவின் காரணம், சிக்கல் எழுத்துருவிற்கு  SooriyanDotCom தான்
பாவிக்க வேண்டும் என்ற கட்டளையை தபுண்டு அமைத்துள்ள போதிலும், OOo-writer
க்கு அவ்வெழுத்துருவை பாவிக்க முடியாமையே. எழுத்துரு தேர்வுப்
பெட்டகத்தில், தேர்வு செய்யப் படக்கூடிய எழுத்துருக்கள் எவைகள் என்பதைப்
பாக்கையில் அந்நிரலில் தபுண்டுவினால்
/usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/  கோப்பகத்தில் உள்ளிடப்பட்ட
SooriyanDotCom, Bamini இரண்டுமே காணப்படவில்லை.  OOo-writer இல்
மட்டுமல்லாமல், ஏனைய செயலிகளிலும் (உதா: Gedit) மற்றும்
Preferences-->Fonts இலும் இவ்விரு எழுத்துருக்களை தேர்வு செய்யப்பட
காணப்படவில்லை. ஆக  OOo-writer கண்டுகொள்ள முடியாத ஒரு  எழுத்துருவை
சிக்கல் எழுத்துருவிற்கு பாவிக்க வேண்டுமென்ற நிர்பந்தத்தில் system
default ஆன  Free Sans உருவைப் பதிலுக்கு உபயோகிக்கிறது.

இவ்விரு எழுத்துருக்களைச் சேர்க்க தபுண்டுவின் கட்டளைகள் பின்வருமாறு:

gksudo cp files/fonts/* /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/
fc-cache

அவை இரண்டும் சரியான கோப்பகத்தினுள் சேர்க்கப்பட்டாலும், பயனர்
கணக்கினுள் தென்படாமைக்கு கொடுக்கப்பட்ட ffc-cache கட்டளை மட்டும் போதாது
என்ற காரணம் இருக்கலாமா என நான் முதலில் எண்ணினேன். அதனால், அருணன் சென்ற
வருடம் எழுதிய கையேட்டில்  உள்ள முறை போல இவ்விரு எழுத்துருக்களையும்
சேர்த்துப் பார்த்தேன்  (பார்க்க: அருணனின் Install Fonts: the "geeky"
way! http://wiki.babytux.org/wiki/doku.php?id=howto-ttf-fonts ).
அம்முறையானது முதலில் பயனர் அகத்தில் ~/.fonts கோப்பத்தினுள்   சேர்க்க
வேண்டிய எழுத்த்ருக்களை உள்ளிட்டு, அதன் பின் அக் கோப்பகத்தினுளிருந்து
mkfontdir, mkfontscale, fc-cache ஆகிய 3 கட்டளைகளைக் கொடுப்பது. அவ்வாறு
செய்தபோது வழு நீங்கியதைக் கண்டேன். இம்முறையைத்தான் மாற்று முறை என
நேற்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், அம் மாற்று முறை தேவையில்லை, ஏனெனில் வேறொரு அடிப்படை
காரணத்தினால் தான் அவ் வழு ஏற்படுகிறது என பின்னர் புலனாகியது. நேற்று
75custom-scim_init கோப்புக்கு எடுத்துக் காட்டியது போல
/usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/ கோப்பகத்தினுள் இவ்விரு
எழுத்துருக்களுக்கான ttf கோப்புகளும் -rwx------ அனுமதிகளுடனே
சேர்க்கப்படுகின்றன.
பார்க்க: http://i5.tinypic.com/2hx3oqq.png  . ஆனால் ஏனைய கோப்புகள்
எல்லாம் -rw-r--r-- என்ற அனுமதிகளுடனே உள்ளன. எனவே இவ்விரு
கோப்புகளுக்கும் அவ்வாறு அனுமதிகளை மாற்றி (sudo chmod 644 ... மூலம்)
அக்கோப்பகத்தினுள் இருந்தவாறு sudo fc-cache என்ற கட்டளை கொடுத்த பின்
எல்லாச் செயலிகளுக்கும் இவ்விரு எழுத்துருக்களும்  வழங்கக்கூடியதாக
முதலில் ஏற்பட்ட வழு நிவர்த்தி ஆனதைக் கண்டேன்.

ஆக தபுண்டு பொதியினுள் அவ்விரு எழுத்துரு ttf கோப்புகளுக்கும் மேலும்
75custom-scim_init கோப்புக்கும் -rw-r--r-- அனுமதிகளை ஏற்படுத்தி விட்டு
live cd இயக்கத்தில் நிறுவினால் இது வரை இக்கோப்புகள் தொடர்பாக நான்
விவரித்துள்ள இரு வழுக்களும் ஏற்படா என்பது என் கணிப்பு. (அவ்வாறு செய்து
பார்ப்பேன் இன்றிரவு)

ஆனால் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். ஒரு எழுத்துருவைச் சேர்க்கையில்
fc-cache கட்டளைக்கு மேலதிகமாக அருணனின் கையேட்டில் கூறப்பட்டுள்ள
mkfontdir, mkfontscale என்ற கட்டளைகள் அவசியமில்லையா? பயனர் அகத்தில்
உள்ளிட்டு configure  செய்வதால்தான் அம் முறையில் அவ்விரு கட்டளைகள
மேலதிகமாகாத் தேவைப்படுகிறதா? நான் அம் முறையையே வழக்கமாகப்
பாவிக்கிறேன்.

நேற்றைய மடலில் குறிப்பிட்ட 3 வது விடயம் பற்றிய அடுத்த மடலை ஒரிரு
நாட்களுக்குள் எழுதுவேன்

அன்புடன்
~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list