[உபுண்டு_தமிழ்]Finally!
மு.மயூரன் | M.Mauran
mmauran at gmail.com
Tue Feb 13 07:15:17 GMT 2007
//விரைவில் (அடுத்த பதிப்பில்) இதனை GPL உரிமத்தோடு வெளியிட முயற்சி
மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
ஆமாச்சு,
பொதியின் script GPL தான். அப்படித்தான் உள்ளே சொல்லியிருக்கிறேன். பாமினி,
சூரியன் டொட் கொம் எழுத்துருக்கள் இருக்கும் வரை முழுமையாக GPL ஆக்க முடியாது.
அந்த இரு எழுத்துருக்களைத்தவிர மற்ற எல்லாமே GPL இல் தான் இருக்கிறது.
//மேலும் sourceforge.net ல் இதற்கென ஒரு திட்டத்தினை பதிவு செய்து
அங்கீகாரம் பெற்று அங்கே இக்கோப்பினை பதிவிறக்கத்துக்காக பதிவேற்றலாம்
எனவும் பரிந்துரை செய்கின்றேன்.//
இது ஒரு மென்பொருள் இல்லை. துணைப்பொதிதான். sourceforge இல் இடம் கிடைக்குமா
தெரியவில்லை.
என்றாவதொருநாள் உபுண்டுவில் தபுண்டுவின் தேவை இல்லாமற்போகும். எல்லா தமிழ்
வசதிகளையும் உபுண்டு இயல்பிருப்பாக கொண்டிருக்கும் நாள் வரும். வரவேண்டும்.
அந்த நாளினையே நானும் தபுண்டுவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070213/fa99db06/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list