[உபுண்டு_தமிழ்]Finally!

ஆமாச்ச ஆமாச்ச
Tue Feb 13 01:43:44 GMT 2007


On Tue, 2007-02-13 at 01:37 +0530, மு.மயூரன் | M.Mauran wrote:
> கடைசியாக ஒருவாறு i386 உபுண்டுவிற்கான தபுண்டு வினை
> முழுமைப்படுத்திவிட்டேன். 
> இதோ பொதி.
> 

மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்

> ராமதாஸ் இப்பொதியினை வழங்கியில் ஏற்றி வைத்துவிட்டு முகவரியை
> தந்தீர்களானால் நல்லது.
> 

நமது இணைய தளத்தின் வலது புறத்தில் உள்ள "தமிழ் பொதிகள்" என்ற இணைப்பினை
சொடுக்குவதன் மூலம் கிடைக்கப் பெறும் இணைப்பிலிருந்தது இதனை பதிவிறக்கிக்
கொள்ளலாம்.

மேலும் சில பரிந்துரைகள்,

விரைவில் (அடுத்த பதிப்பில்) இதனை GPL உரிமத்தோடு வெளியிட முயற்சி
மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் sourceforge.net ல் இதற்கென ஒரு திட்டத்தினை பதிவு செய்து
அங்கீகாரம் பெற்று அங்கே இக்கோப்பினை பதிவிறக்கத்துக்காக பதிவேற்றலாம்
எனவும் பரிந்துரை செய்கின்றேன்.

அதற்கான இணைப்பினை நமது இணைய தளத்தில் கொடுப்பது உசிதமாக இருக்கும் எனவும்
தோன்றுகிறது.

தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

நன்றி

அன்புடன்,
ஆமாச்சு.





More information about the Ubuntu-l10n-tam mailing list