[உபுண்டு_தமிழ்]?

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Aug 9 16:23:08 BST 2007


On Thursday 09 August 2007 20:03:00 K. Sethu wrote:
> //The quick brown fox jumps over the lazy dog. 0123456789
> is there an equivalent in tamil?//
>
> எல்லா 247 தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கிய சொற்களாலால் மட்டும் ஆன தமிழ் 
> pangram ஒன்று உருவாக்க முடியாது என நினக்கிறேன்.


சரி தான்.. ஆனா ஆங்கிலத்தில் 26 எழுத்துதானேன்னு கேட்டா இப்படி தான் பதில் சொல்றது..

உண்மையில் தமிழில் 30 எழுத்துதான்.. இவை சேரும் போது உருவாகும் எழுத்துக்கு நாம் சிறப்பு வடி
வம் கொடுக்கறோம்..

ஆங்கிலத்தில் அப்படியே போட்டு சேர்த்து எழுதிடறாங்க.. இதனால put னா புட் என்றும் but என்றால் 
பட் என்றும் சொல்ல வேண்டி வருது..

 "w" எனும் எழுத்து எப்படி உச்சரிக்கப் படுதோ அப்படியே சொற்களில் உச்சரிக்கப் படுவதில்லையே!

தமிழில் இந்த பிரச்சனை இல்லை பாருங்க!

ஆக, உயிரும் மெய்யும் சேர்ந்த முப்பதைக் கொண்ட வாக்கியமே நம் தேவை... அதுவும் ஏதாவது செய்யுளி
ல் இருக்கும்.. தேடினா கிடைக்கலாம்...

சரி அவங்க அப்படி செய்தாங்கன்னு நாமும் அப்படி செய்யணுமா?

;-)


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list