[உபுண்டு_தமிழ்]?

K. Sethu skhome at gmail.com
Thu Aug 9 15:33:00 BST 2007


//The quick brown fox jumps over the lazy dog. 0123456789
is there an equivalent in tamil?//

இல்லை.

ஆங்கில வசனம் ஏற்படுத்தப்பட்டிருப்பதன் காரணம் ஆங்கில தட்டச்சு கருவிகள் பாவனைக்கு வந்த 
காலங்களில் அவ்வப்போது எல்லா எழுத்துருக்களும் சரியாக அச்சிடப்படுகின்றனவா என்பதைச் 
சோதிக்கவாம். பின்னர் அவ்வாறே telex, கணினி விசைப்பலகைகளுக்கும் அதைப் பாவித்தனர்.

அவ்வசனத்தில் எல்லா எழுத்துக்களையும் simple case ஆக ஒரு முறையும் capital case ஆக 
இன்னொரு முறையும் சோதிக்க வேண்டியிருக்கும்.
 
தட்டச்சு கருவியில் சோதிப்பது காகிதத்தில் அடிக்கும் விசைகளின் முனைகளில் எவைகள் எல்லாம் 
தேய்மானங்கள் காரணமாக மாற்றப்பட வேண்டும் என்பதைக் கண்டறிய. telex, கணினி போன்ற 
digital கருவிகளில் மென்பொருள் மாற்றிகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை 
சோதிக்கவும் அத்துடன் அச்சிடும் கருவிகளின் அச்சு முனைகளின் தரத்தையும் பார்ப்பதற்கும். 

ஆங்கிலத்தில் அத்தகைய வசனத்தை pangram என்பர். பார்க்க: 
http://en.wikipedia.org/wiki/The_quick_brown_fox_jumps_over_the_lazy_dog 
<http://en.wikipedia.org/wiki/The_quick_brown_fox_jumps_over_the_lazy_dog>
மற்றும் http://en.wikipedia.org/wiki/Pangram .

எல்லா 247 தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கிய சொற்களாலால் மட்டும் ஆன தமிழ் pangram 
ஒன்று உருவாக்க முடியாது என நினக்கிறேன். ஏனெனில் பல உயிர்மெய்கள் சொற்களில் 
பாவிக்கப்டுவதில்லை.

உதாரணமாக ங் என்பதன் அகரமெய் "அங்ஙனம்", "இங்ஙனம்" என்ற சொற்களில் உள்ளது. ஆனால் ங் 
என்பதின் ஏனைய உயிர்மெய்கள் (ஙா, ஙி, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙே, ஙே, ஙௌ) எங்காவது 
சொற்களில் பாவிக்கப்படுகிறதா? இல்லை என நினைக்கிறேன். அவ்வாறான சொற்களில் பாவிக்கப்படாத 
எழுத்துக்களை உள்ளடக்க அவற்றை தனி எழுத்துக்களாகத்தான் ஒரு வசனத்தில் இட்டு சோதிக்க முடியும்.

தமிழ் தட்டச்சு கருவியின் அச்சு முனைகளை சோதிக்க எல்லா 247 தமிழ் எழுத்துக்களும் 
உள்ளடங்கிய வரி அல்லது வரிகள் தேவையில்லை. ஏனெனில் புள்ளி, அரவு (ா), ெ , ே , ை 
ஆகிய உயிரொலிகள் அவற்றின் முன்னோ பின்னோ வரும் எந்தவொரு அகர மெய்யில் இணையாமல் தனித்து 
உள்ளதால். எனவே அவ்வுயிரொலிகள் வரும் உயிர்மெய்கள் மற்றும் ஔகார உயிர்மெய்கள் 
ஒவ்வொன்றையும் சோதிக்க வேண்டியதில்லை.

ஆங்கிலத்தில் கூட இந்த வசனம் 33 எழுத்துக்களை கொண்டுள்ளது. அதைவிட குறைவான 
எழுத்துக்களால் ஆக்கப்பட்ட சில வசனங்களும் உள்ளன். 26 எழுத்துக்களை மட்டும் உள்ள வசனங்கள் 
இரண்டு உள்ளன. பார்க்க: http://rinkworks.com/words/pangrams.shtml 
<http://rinkworks.com/words/pangrams.shtml>

~சேது

-------- Original Message --------
Subject: Re:[உபுண்டு_தமிழ்]?
From: Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com, amachu at ubuntu.com
Date: Thu Aug 09 2007 15:07:07 GMT+0530 (IST)
> அதுதான்.
> பல எழுத்துக்களும் பயன்படும் வரியமைப்பு இருக்கிறதா என வினவினேன்.
> திவே
>
> On 8/9/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>  
>> On Thursday 09 August 2007 12:56:13 senthil raja wrote:
>>   
>>> tamil name for brown?? is it "kaavi"?
>>>
>>>    
>> கீழ் காணும் ஆங்கிலச் சொல்லின் சிறப்பம்சம் அதில் 26 ஆங்கில எழுத்துக்களும் இருப்பது தானே?
>>
>> இதற்கு ஈடாக வல்லின மெல்லின இடையின எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்...
>>
>> On 8/3/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>>   
>>>> The quick brown fox jumps over the lazy dog. 0123456789
>>>> is there an equivalent in tamil?
>>>> tv
>>>>     
>> --
>> அன்புடன்,
>> ஆமாச்சு.
>> http://amachu.net
>>
>> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
>> வாழிய பாரத மணித்திரு நாடு!
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>   
>
>
>  

More information about the Ubuntu-l10n-tam mailing list