[உபுண்டு_தமிழ்]டிவிஎஸ் நிறுவனத்தின் தமிழ் 99 விசைப் பலகை ?

K. Sethu skhome at gmail.com
Sat Dec 30 15:30:02 GMT 2006


On 12/30/2006 09:04 AM, amachu wrote:
> அன்புடையீர்,
>
> TVS நிறுவனம்  உற்பத்தி செய்து வெளியிட்டுள்ள தமிழ் 99  விசைப்பலகையை
> இம்மடலுடன் இணைத்துள்ளேன்.
>
> தமிழ் 99 நியமங்களை  இது ஒத்துள்ளதா  என சரி பார்த்துச் சொல்லவும். இதனை
> அடிப்படையாக கொண்டு மாணாக்கருக்கு கணினி கல்வி போதிக்க உள்ளோம்.
>   
ராமதாஸ்

கடந்த சில நாட்களாக தமிழ்99 என்ற பெயரில் உள்ள விசைப்பலகை அமைப்புக்கள் பலவற்றை, தமிழக 
அரசின் நியமங்களுக்கு எந்த அளவுக்கு கட்டுப்படுகின்றன என்பதைப் பார்க்க  எச்.டி.எம்.எல்  
கோப்பாக  அட்டவனை  ஒன்று  தயாரித்துள்ளேன் -  நான்  அலசிய  தமிழ்99 எனக் கூறிக்கொள்ளும் 
விசைப்பலகை அமைப்புக்கள் பின்வருபவை:

லினக்சுக்கு: 1).  m17n-ta-tamil99,  2). GTK_2-IM-MODULE

விண்டோவிற்கு : 1). எ-கலப்பை, 2). குறள் - 3.3 3). முரசு - அஞ்சல் 9.7  4). Tamil 
Indic IME version 1 (of Bhashaindia.com )

எந்த இயங்கு தளத்திலும் மொசில்லா மென்பொருட்களுக்காக: தமிழ் விசை -3 (தமிழா குழுமத்தின்)

தாங்கள் காட்டியுள்ள http://www.tamilvu.org/Tamilnet99/keyboard.gif என்பது 
உருவரை மட்டுமே - அதற்கு அமைய விசைப்பலகை தயாரிப்பதில் யாருக்கும் பிரச்சினைகள் 
இருக்காது. (தாங்கள் அனுப்பிய TVS இன்  உருவரையை இன்னமும் கூர்ந்து பார்க்கவில்லை).

எனினும் நியமத்தில் கோரப்பட்டுள்ள keystrokes (விசைச்சொடுக்குகள் ?) நாம் பாவிக்கும் 
விசையமைப்பு மென்பொருளில் சரியாக எழுதப்பட்டுள்ளவா, எவ்வளவு தூரம் சரி / தவறு என்பதே 
எனது ஆராய்வு. தமிழ்99 keystrokes க்கான நியமக்கட்டளைகள் இங்கு உள்ளன: 
http://www.tamilvu.org/Tamilnet99/order.htm

இப்போதைக்கு சுருக்கமாக சொல்வதானால் எ-கலப்பையின் தமிழ் 99 தான் அதிகமாக 
கட்டுப்பட்டுள்ளது - அடுத்ததாக   Tamil Indic IME..

எல்லா வி.ப. களிலும் ஒன்றிலிருந்து பல தவறுகள் உள்ளன. இவற்றை நான் வலைப்பதிவில் 
வெளியிடயுள்ளேன், அடுத்த சில தினங்களுக்குள், கல்ந்துரையாடுவத்காக - தங்களுக்கு 
உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
> பெலிக்ஸ் அவர்கள் ரெட்ஹாட்க்காக இதன் SCIM உள்ளீட்டு முறையினை
> எழுதியுள்ளதை  பெடோரா 6 ல் பார்த்தேன். அதன் Debian வடிவம் பதிவிறக்க
> உள்ளதா? உபுண்டுவில் அதனை பரிசோதித்துப் பார்த்த அனுபவம் யாருக்கேனும்
> உளதா?
>
>  
>   
தமிழ் 99 க்காக அவர் எழுதியது தான் பின்னர்  m17n-ta-tamil99  என வந்தது - நாம் இம் 
மடலாற்ற குழுவில் முன்னர் கலந்துரையாடியுள்ளோம் 2-3 மாதங்கள் முன். ரவி முதலில் 
கேட்டார். பின் மயூரன் தயாரித்து கொட்டுத்த பொதிகளில் (முதலில் டாப்பர், பின் எட்ஜி) அது 
உள்ளது.

நண்பர் பீலிக்ஸ் சென்ற மாதம் தட்டச்சு அமைப்பு ஒன்றை ரெட்ஹாட்டுக்காக ஒன்றும் உருவாகினார் - 
இது புது தட்டச்சு முறை. இது நவம்பர் கடைசிகளில் m17n இன் cvs இல் சேர்க்கப்பட்டது - 
அதில் உள்ள வழுக்களை முதலில் m17n-lib மடலாற்ற குழுமத்திற்கு அனுப்பினேன். ஆனால் அஙகு 
ஏதோ காரணத்திற்காக பிரசுரிக்கப்படவில்லை (போய் சேர்ந்ததோ தெரியவில்லை) - பின்னர் நண்பர் 
பீலிக்சுடன் நேரடியாக மடல்கள் மூலம் எடுத்துக்காட்டினேன் - அவர் ரெட்ஹாட்டுக்காக 
திருந்துவதாகக் கூறினார் 3 வாரங்கள் முன். m17n-ta-typewriter என்று டிசம்பர் முதல் 
வாரத்தில் வந்த m17n-contrib  இல் வந்ததில் வழுக்களுடன் தான் உள்ளது.  தட்டச்சு 
முறைகளில் உள்ள வழுக்களையும் அட்டவனை போல தயாரித்து வருகிறேன் - அடுத்ததாக வெளியிட.

வலைப்பதிவுகளை செய்தபின்  மேலும் எழுதுகிறேன்

~சேது



More information about the Ubuntu-l10n-tam mailing list