[உபுண்டு_தமிழ்]டிவிஎஸ் நிறுவனத்தின் தமிழ் 99 விசைப் பலகை ?

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Dec 30 15:05:47 GMT 2006


சில விஷயங்கள்:

மயூரன் அனுப்பிய tabuntu
(http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/தமிழ்_பொதிகள்)
கோப்பில் m17n-contrib பொதியினை நிறுவியதில் Tamil 99 விசைப்பலகை கிட்டியது.
:-)

இதில் வருடம் முதலிவற்றினைக் குறிக்கும் பொருட்டு தமிழ்99 விசைப்பலகையில்
கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகள் சரிவரவில்லை.

மேலும் க்ஷ - என்பதும் கூட்டெழுத்தாய் வரவில்லை.

இங்ஙனம் இருப்பதற்கும் எழுத்துருக்கும் சம்பந்தம் உள்ளதா? தமிழ்99 விசைப்
பலகை   க + அ = க என்ற ரீதியில் வடிவமைக்கப் பட்டுள்ளதற்கு ப்ரத்யேக காரணம்
உள்ளதா?
க் + அ = க என்பது ஏன் கடைபிக்கப் படவில்லை? எவரேனும் அறிந்தவர்
சொல்லுங்களேன்...

இப்பொதிகளின் தொகுப்பில் Remington  இல்லை  எனத் தோன்றுகிறது. மேலும்
அப்பொதியுள் அடக்கப் பட்டுள்ள scim-additional-tables ல் Phoenetic & Inscript
விசைப்பலகைகள் மட்டும் உள்ளது.

ரெமிங்கடன் முறை இயல்பாக தற்போது scim-additional-tables  பொதியில்
சேர்க்கப்பட்டுள்ளதால் அடுத்த Feisty வெளியீட்டில் இது இடம்பெறும் என நம்பலாம்.
இங்ஙனம் scim-additional-tables பொதிபிலேயே  Tamil99 மற்றும் Bamini  யும்
சேர்க்கப்படுதல் நலம்.

http://www.scim-im.org/downloads/imengines_download பக்கத்தில் scim-tables
Version 0.5.7 பதிவிறக்கி இதனை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் scim-additional-tables அவசியமில்லாமல் அனைத்து பாரதிய மொழிகளுக்கான
விசைப் பலகைகளையும் நிறுவுகிறது.  இதனைத் தவிர்த்து scim-tamil-tables என தமிழ்
பொதி ஒன்றினை  செய்வது அதிக ஆற்றல் உள்ளதாய் இருக்கும்.

தங்கள் கருத்துக்களை  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

தொடரும்...

On 12/30/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> தமிழ் பல்கலைக் கழகத்தால் வெளியிடப் பட்டுள்ள தமிழ் 99  விசைப்பலகையின்
> வடிவம் இணைக்கப் பட்டுள்ளது.
>
> http://www.tamilvu.org/Tamilnet99/keyboard.gif
>
>
>


-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061230/6997e60e/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list