[உபுண்டு_தமிழ்]எட்ஜியில் UIM உள்ளிடல் முறை [was: Re: (no subject)]
Sethu
skhome at gmail.com
Fri Dec 1 15:52:22 GMT 2006
நண்பர்களே
scim அல்லாத சூழலில் ஒரு மாற்று முறையாக UIM (Universal Input Method)
உள்ளிடும் முறை m17n பின்முனை (backend) உடன் எட்ஜியில் சிறப்பாக
இயங்குகிறது- skype க்குள் கூட uim-m17n உபயோகிக்கலாம் - நான் இவற்றை 3
நாட்கள் முன் கண்டறிந்தேன்.
முதற்கண் மயூரன் இன்று எழுதிய மடல்:
On 12/1/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> நான் அனுப்பிய "தபுண்டு" பொதிக்கான வலைப்பக்கம் ஒன்றை உருவாக்கி வருகிறேன்.
> அங்கே நிறுவற்குறிப்புக்களையும் மேலதிக குறிப்புக்களையும் உள்ளிட்டிருக்கிறேன்.
>
>
> http://www.viduthalai.org/home/doku.php?id=tabuntu
>
> அந்த உரைப்பகுதிகள் திறந்த மூலம். அவற்றை எடுத்து தமிழ் உபுண்டு தளத்தில்
> விரும்பினால் தாராளமாக பயன்படுத்தவும்.
>
> -மு.மயூரன்
தபுண்டு தளத்தில் தாங்கள் எழுதியுள்ள எதிர்கால திட்டத்தில் முதலாவது:
>>
solving qtim issue - skype is the only app that getting crashed on
it's start up. how to launch skype without loading qtimm?
<<
எனது கருத்து: skype ஆனது qt அடிப்படையில் (gtk அல்ல) இயங்குவது. skype
உபயோகிக்க scim ஐ செயலிழக்கச் செய்ய உள்ளது. அதாவது
http://mail.lug.lk/lurker/message/20061108.095716.fe20ff27.en.html இல்
rajitha udawalpola சொல்வது போல : XMODIFIERS=@im=none QT_IM_MODULE=xim
skype என்ற கட்டளையுடன் skype இயங்குகிறது, ஆனால் scim உள்ளிடும் முறை
இயலாமல்.
ஆகா skype உபயோகிப்பவர்கள் எவ்வாறு தமிழ் (அது போல் மற்றைய மொழிகள்)
உள்ளிட வேறு எந்தெந்த வழிகள் உபுண்டுவில் இயலும் வகையில் உள்ளன என்பதை
சில நாட்கள் முன் ஆராயத்தொடங்கினேன்.
xkb முறை செயல் படுகிறது. ஆனால் தட்டச்சு, இன்ஸ்கிரிப்ட் தவிர மற்றைய
(குறிப்பாக நான் விரும்பும்) முறைகள் இல்லை xkb யில் என்பது குறை -
தெரியும்தானே?
GTK2-IM பயனில்லை, skype qt அடிப்படையானது என்பதால் . தமிழுக்கு யாரும்
qt-im-module விசைப்பலகை எழுதவில்லை
iiimf முயன்றேன். சில முன்னைய (FC4 and before) fedora core களில்
பார்த்திருந்த அளவுகளை விட கூடுதலான பிரச்சினைகள் போல் இருந்தது.
தற்போதைக்கு கை விட்டுவிட்டேன்.
கடைசியாக UIM - இது எட்ஜியில் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதுது -
(இப்போது இம்மடலை உள்ளிடுவது கூட scim அற்ற சூழலில் UIM சக
m17n-ta-avarangal மூலமே). குனோம், கே.டீ.ஈ, xFce என மூனறு
மேயைத்தளங்களிலும் skype உட்பட இதுவரை முயன்ற பல செயலிகளிலும் m17n
விசைப்பலகைகள் இந்த UIM முறையில் சரியாக இயங்குகின்றன. (lk-lug க்கு இதை
அறிவித்தும் இருந்தேன் -
பார்க்க : http://mail.lug.lk/lurker/message/20061129.020719.37e5f6e8.en.html )
எட்ஜியில் UIM எப்படி நிறுவி இயக்குவது, டாப்பரில் uim இயக்குவதில் கண்ட
பிரச்சினைகள் என்பதை பற்றி எழுத கடமைப்பட்டுள்ளேன் - அடுத்த இரு
தினங்களுள் தமிழினிக்ஸ், lk-lug (linux/sinhala) குழுமங்களுக்கும், இக்
குழுமத்திற்கும் சேர்த்து எழுதுவேன்.
UIM மற்றும் ஏனையவைகள் எவ்வாறாயினும், qt-im சார் சூழலில் scim இனால்
skype செயலிழக்கும் வழு தீர்க்கப்பட வேண்டியதே.
கா. சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list