சில யோசனைகள்...

ஸ்ரீ ஸ்ரீ
Sun Aug 6 01:02:22 BST 2006


வணக்கம்!

இப் பணி மேற்கொள்ளத் துவங்கும் முன் சில அடிப்படை  யோசனைகள்...

தற் சமயம் அணியின் உறுப்பினர் எண்ணிக்கையை  கருத்தில் கொண்டு.. சில
விஷயங்கள்!

1)  ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு பத்து சொற்களை  மொழிபெயர்த்தால் போதும்.
மேலும் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டது மற்றொருவரால் சரி பார்க்கப்பட்டு
பதிவேற்றப்படவேண்டும்.

2) இதற்கு இருவர் குழுக்கள் வேண்டும். வார நாட்களில் (திங்கள் முதல்
வெள்ளி) நாளொன்றுக்கு 10 வீதம் 50 சொற்கள் ஒருவரால் மொழிபெயர்க்கப் படும்.
இது மற்றொருவரால் அவ்வார நாட்களிலேயே  சரிபார்க்கப்பட வேண்டும். சனிக்
கிழமை  வரை இப்பணி தொடரும்.

3) ஞாயிற்றுக்கிழமை இங்ஙனம் மொழிபெயர்க்கப்பட்ட கோப்புகள்
பதிவேற்றப்பட்டும். மேலும் இக்கோப்புகள் ஒவ்வொரு உறுப்பினருக்கும்
அனுப்பப்படும். இதை அவரவர் Kabel அகராதியில் ஏற்றிக்கொண்டு பயனடையலாம்.

4) #ubuntu-ta @ freenode நம்முடைய IRC Channel ஆகும்.  தினசரி  நமக்குள்ளே
விவாதங்கள் செய்ய இதை பயன் படுத்தலாம்.  தினசரி இந்திய மணிகாலை 7.00 - 7.30
மற்றும் இரவு 10.00-10.30 நேரங்களை  நாம் பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்துக்கள்?

வாழ்த்துக்கள்!!
On Sat, 2006-08-05 at 21:19 +0530, Tirumurti Vasudevan wrote:
> பரவாயில்ைல.
> இனி பங்கேற்றால் சரி.
> அகராதி குறித்து கருத்துகைள சொல்லுங்கள்
> வாசுதேவன்
> 
> On 8/5/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> > இந்த மடலாடற்குழுவில் இணைந்ததுதான் ஞாபகமிருக்கிறது.
> > பின்னர் அனுப்பப்பட்ட மடல் எதனையும் நான் படிக்கவில்லை.
> >
> > இதற்கு என்னுடைய கவனயீனமே காரணம்.
> > ஏற்கனவே இருந்த ubuntu developer, ubuntu user மடலாடற்குழுக்களுகென நான்
> > வைத்திருந்த gmail வடிகட்டியினுள் உங்கள் மடல்களும் போய் சேர்ந்துவிட்டன.
> > வழமைபோல் அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
> >
> > இப்போது புதிதாக வடிகட்டி ஒன்றை உருவாக்கியிருக்கியிருக்கிறேன்.
> > இன்றிலிருந்து உங்கள் உரையாடல்களில் நானும் இணைந்துகொள்வேன்.
> >
> > -தோழமையுடன்
> > மு.மயூரன்
> >
> > --
> > visit my blog
> > http://www.mauran.blogspot.com
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> >
> 
> 
> -- 
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
More information about the Ubuntu-l10n-tam mailing list