[உபுண்டு பயனர்]அஞ்சல் வழி உபுண்டு பெறும் முறையில் மாற்றம்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sat Sep 11 10:57:32 BST 2010
வணக்கம்,
இதுவரை உபுண்டு வட்டுக்களை http://ubuntu-tam.org/vaasal/ubuntu-media-request
(http://ubuntu-tam.org/vaasal/ubuntu-cd-request ஆக இது முன்பிருந்தது) பக்கத்தின் மூலம் விண்ணப்பித்து
இலவசமாகவும் வி.பி.பி மூலமாகவும் பல நூற்றுக்கும் மேற்பட்டோர் பெற்றிருக்கின்றனர்.
இனி நிதியாதாரம் சற்றே மேம்படும் வரையில் வி.பி.பி மூலமாக மட்டுமே வட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும். மீண்டும் இலவசமாக அனுப்பத் தொடங்கும் முன்னர்
தெரியப்படுத்துகிறோம்.
வி.பி.பியின் மூலம் பெறுவோர் அளிக்கும் நிதியும் இலவசமாக பிறர் பெறுவதற்கு ஒரு காரணம் என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்துகிறோம்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-tam
mailing list