[உபுண்டு பயனர்]விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு லினக்ஸ் அறிமுகம்
தங்கமணி அருண்
thangam.arunx at gmail.com
Tue Nov 10 19:37:07 GMT 2009
வணக்கம்.
கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி
அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள
பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கு பெற்று
பயனடைந்தனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை வட்டு மூலம் எப்படி இயக்குவ மற்றும் அதை
எப்படி நிறுவுவது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் வழங்கப்பட்டன. மேலும் +2
மாணவர் சிலருக்ககு உபுண்டுவில் "C" புரொகிராமிங் செய்வது எப்படி என்றும்
அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. நிகழ்ச்சியானது மிக்க பங்களிப்புடன்
முடிவடைந்தது.
நிகழ்ச்சி இனிதே நடந்திட இரவிச்சந்திரன்-சுதேசிய இயக்கத்திலிருந்தும், இராஜி,
பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் ஆகியோர் உபுண்டு தமிழ் மற்றும்
லினக்ஸ்-பயனர்-குழுமம்-சென்னையில் இருந்தும் தன்னார்வத்துடன் முன்வந்து
பங்களித்து உதவி புரிந்தமைக்கு நம்ம குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
இந்நிகழ்ச்சி பற்றிய ஆங்கல தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்:
http://foss-suvadugal.blogspot.com/
--
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091111/352f41fb/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list