[உபுண்டு தமிழகம்]கேயுபுண்டுவில் தமிழ்99 வசதிகள்...

vikram balaji tayirvadai.vikram at gmail.com
Sun Jul 1 03:58:40 BST 2007


நல்ல  முயர்ச்சி. மிகவும்  வுபயோகமாக  இருந்தது.

On 7/1/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> வரைகலை  இடை முகப்பினைக் கொண்டு
>
> முதலில் தமிழ் கேயுபுண்டு<http://www.ubuntu-tam.org/downloads/tamil-kubuntu-edgy.tar.gz>பொதியினைப் பதிவிறக்கிக் கொள்ளவும். பதிவிறக்கப் பட்ட கோப்புள்ள அடைவிற்குக்
> கான்கொயரர் மூலம் பயனித்து, கோப்பினைத் தேர்வு செய்து அதன் மீது வலது புறமாக
> சொடுக்குங்கள்.  மேலுழும்பும்  சாளரத்தில், Extract -->  Extract  to   tamil-
> kubuntu-edgy   என்பதனைத்   தேர்வு  செய்யுங்கள்.  பின்னர் விரிக்கப் பட்டு
> உருவாக்கப் படும் tamil-kubuntu-edgy அடைவினுள்  பயனித்து,  அனைத்து
> கோப்புகளையும் தேர்வு செய்ய  Ctrl-A சொடுக்கவும்.  பின்னர் வலது புறமாகச்
> சொடுக்கி  மேலெழும்பும்  சாளரத்தில்  Kubuntu Package Menu -->   Install
> Package  தேர்வு   செய்தால்  நிரல்கள் நிறுவப் பெற்று, அடுத்த அமர்வில்
> தமிழ்99  பயன்படுத்துவதற்கான அனைத்து  வசதிகளும் கிடைக்கப்   பெறுவீர்கள்.
>
> முனையத்தின்  துணையுடன்
>
> முதலில் தமிழ் கேயுபுண்டு<http://www.ubuntu-tam.org/downloads/tamil-kubuntu-edgy.tar.gz>பொதியினைப் பதிவிறக்கிக் கொள்ளவும். முனையத்தினைத் துவக்கி பதிவிறக்கப் பட்ட
> கோப்பிருக்கும் அடைவிற்கு  cd  ஆணையின் துணைக் கொண்டு பயனிக்கவும்.
>
> பின்னர்,
>
> $ tar xzvf tamil-kubuntu-edgy.tar.gz
>
> ஆணைக் கொடுத்தால் நிறுவப் பட வேண்டிய அனைத்து கோப்புகளும் விரிக்கப் பட்டு
> தாங்கள் இருக்கக் கூடிய நிகழடைவில் போடப்படும்.  எனவே  இதற்கென  தனியொரு
> அடைவினை  உருவாக்கி அதனுள் tamil-kubuntu-edgy.tar.gz  னை  நகலெடுத்து
> பின்னர் அவ்வடைவிலிருந்து தாங்கள் இவ்வாணையினை  வழங்களாம்.
>
> கீழ்காணும் ஆணையினைக் கொடுத்தால் அனைத்து டெபியன் பொதிகளும் நிறுவப் பட்டு
> அடுத்த அமர்விலிருந்து தமிழ்99  உள்ளிட்ட ஏனைய உள்ளீட்டு வசதிகளும் கிடைக்கப்
> பெறுவீர்கள்.
>
> $ sudo  dpkg -i *.deb
>
> பி.கு: தமிழ்99  ன் அவசியம் குறித்து அறிய http://amachu.net/blog/?p=41பக்கத்தினை  அணுகவும்...
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070701/ed9e835a/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list