[உபுண்டு தமிழகம்]ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Feb 28 18:38:50 GMT 2007


இவ்வணுகு முறையானது அதன் போக்கிலேயே பயனுள்ளதாய் அமைந்தது எனலாம். பல
வர்த்தகங்களையும் தனிநபர்களையும் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கவும்
பயன்படுத்தவும் திறந்த மூல சித்தாந்தம் தயார் படுத்தியது. இது நமது சமுதாயம்
விரிவடைய உதவியது. ஆனால் இது நடைமுறைக்குகந்த மேம்போக்கான அளவில் மட்டுந்தான்.

நடைமுறை சிந்தனைகளுடன் கூடிய திறந்த மூலத்தின் சித்தாந்தம் கட்டற்ற
மென்பொருட்களின் ஆழ்ந்த சிந்தனைகளைப் புரிந்துக் கொள்ளவதில் தடை
ஏற்படுத்துகிறது. பலரை நமது சமூகத்திற்கு கொண்டு வந்தாலும் அவர்களுக்கு
சுதந்திரத்தை பேணிக் காக்க அது கற்றுத் தரவில்லை. அது போகிறா போக்கில் நலம்
பயப்பதாய் இருக்கலாம் அனால் அது சுதந்திரத்தினை காக்க இயலாது உள்ளது. கட்டற்ற
மென்பொருட்களின் பால் பயனரை வரவழைப்பது என்பது தங்களின் சுதந்திரத்தினை தாங்களே
காத்துக் கொள்கிற அளவிற்கு பயனரை இட்டுச் செல்வதின் துவக்கமே!

மிக விரைவிலேயே இப்பயனர்களுக்கு நடைமுறை இலாபங்களைச் சுட்டிக்காட்டி தனியுரிம
மென்பொருட்களைப் பயன்படுத்த மீண்டும் அழைப்பு விடுக்கப் படும். எண்ணற்ற
நிறுவனங்கள் இத்தகைய தூண்டிலிட தயாராய் இருக்கின்றனர். சிலர் மென்பொருட்களை
இலவசமாகத் தரவும் தயாராய் உள்ளனர். தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சவுகரியங்களைக்
கடந்து கட்டற்ற மென்பொருட்கள் தருகின்ற சுதந்திரத்தினை மதிக்க கற்றுகொண்டாலொழிய
பயனர்கள் இவற்றை எப்படி மறுப்பார்கள்? இவ்வெண்ணத்தினைப் பரப்ப நாம்
சுதந்திரத்தினைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். வர்த்தக நோக்கில் சற்றே அடக்கி
வாசிப்பது சமூகத்திற்கு நன்மைப் பயப்பதாய் இருக்கலாம். சுதந்திரத்தின் மீதுள்ள
பற்றென்பது மையப்பொருளாக இல்லாது போய்விடுமானால் இது மிகவும்
ஆபத்தானதாகிவிடும்.

வர்த்தகத்திற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்கின்ற காரணத்திற்காக கட்டற்ற
மென்பொருட்களோடு தொடர்புடைய பெரும்பாலான மக்கள் சுதந்திரத்தினைப் பற்றிய
பேச்சினையே எடுப்பதில்லை. மென்பொருள் விநியோகஸ்தர்கள் இதைப் பற்றி நன்கறிவர்.
கிட்டத்தட்ட எல்லா குனு/ லினக்ஸ் வெளியீடுகளுமே இயல்பாய் இருக்கக்கூடிய கட்டற்ற
மென்பொருட்களோடு தனியுரிம மென்பொருட்களையும் சேர்க்கிறார்கள். சுதந்திரத்தில்
இருந்து பின்வாங்குகின்றோம் என்பதை விடுத்து, இதனைச் சாதகமானதாய் கருதச் சொல்லி
பயனர்களை வரவேற்கிறார்கள்.

நமது சமூகம் மென்பொருளோடு கூடிய சுதந்திரத்தினை வலியுறுத்தாததால் தனியுரிம
கூடுதல் மென்பொருட்களுும் அரைகுறை குனு/ லினக்ஸ் வழங்கல்களுும் வலுவான
அடித்தளம் அமைத்துக் கொள்கின்றன. இது தற்செயலானது அல்ல.  சுதந்திரம் தான்
லட்சியம் என்பதை வலியுறுத்தாத, "திறந்த மூலம்" என்கிற  வாதத்தின் மூலம்
பெரும்பாலான குனு/ லினக்ஸ் பயனர்களுக்கு  இம்முறை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
சுதந்திரத்தைப் பேணிக்காக்காத பழக்கவழக்கங்களும் சுதந்திரத்தைப் பற்றி பேசாத
வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று துணைப் போகின்றன. இவை  பரஸ்பரம் ஒன்றை  மற்றொன்று
வளர்க்க உதவுகிறது. இந்த இயல்பினை  மாற்ற, சுதந்திரத்திற்காக குறைவாக இல்லை
மாறாக அதிகமாக நாம்  நாம் குரல் கொடுக்க வேண்டும்.

நிறைவுரை:

திறந்த மூல வாதத்தினர் நமது சமூகத்திற்கு அதிக பயனர்களை ஈட்டித் தருகின்ற
இத்தருணத்தில், கட்டற்ற மென்பொருள் ஆதரவாளர்களாகிய நாம் இத்தகைய புதிய
பயனர்களின் கவனத்திற்கு சுதந்திரத்தினை எடுத்தச் செல்ல மேலும் முயற்சி செய்ய
வேண்டும். "இது கட்டற்ற மென்பொருளாகையால் உனக்கு சுதந்திரத்தினைத் தரவல்லது!"
என்பதை  முன்னெப்பொழுதையும் விட உரக்கமாக நாம் எடுத்தியம்ப வேண்டும். "திறந்த
மூலம்" என்பதற்கு மாற்றாக "கட்டற்ற மென்பொருள்" என்று கூறுகிற ஒவ்வொருதடவையும்
நீங்கள் எங்களுடைய பிரச்சாரத்திற்கு தோள் கொடுக்கிறீர்கள்.

பின்குறிப்புகள்:

இவ்விஷயத்தில் "வாழு - உரிமத்திற்கு வழி விடு" என்கிற கோணத்தில் ஜோ  பார்
அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

கட்டற்ற  மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு ஊக்கமளிக்கும் லகனி மற்றும்
உல்பினுடைய அறிக்கையானது மென்பொருள் கட்டற்று இருக்க வேண்டும் என்பதனால்
கணிசமானோர் ஊக்கம் பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றது. இந்த தார்மீகத்திற்கு
முக்கியத்துவம் அளிக்காத இணைய தளமான சோர்ஸ்போர்ஜின் நிரலாலர்களை உள்ளடக்கியும்
இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டது.

முற்றும்...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070301/de1390cc/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list